வெளிநாட்டு மாணவர்களை இழுக்கும் அமெரிக்கா!
லண்டன்:
பிற நாடுகளை விட அமெரிக்காவில் படிப்பதற்கே வெளிநாட்டு மாணவர்கள்முன்னுரிமை கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி கழகம் இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.உயர்கல்வி பயில பிற நாடுகளை விட அமெரிக்காவையே இந்தியா உள்ளிட்ட பல்வேறுநாட்டு மாணவர்களும் தேர்வு செய்கிறார்கள். அமெரிக்காவில் தரமான கல்விகிடைப்பதோடு, வேலைவாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதே இதற்கு முக்கியகாரணம்.
இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுமாணவர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளதாம். நான்கு ஆண்டுகளுக்குமுன்பு இது 25 சதவீதமாக இருந்தது. தற்போது 22 சதவீதமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு போட்டியாக பல்வேறு நாடுகள் வெளிநாட்டு மாணவர்களை கவரஆரம்பித்துள்ளதே இதற்கு காரணம். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2004 வரை உலககல்விச் சந்தையில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 41 சதவீதமாகஉயர்ந்துள்ளது. அதாவது 20.7 லட்சம் மாணவர்கள் அமெரிக்காவை விட்டு விட்டுவேறு நாடுகளுக்கு கல்வி பயில சென்றுள்ளனர்.
செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அரசு பல்வேறுவிதிகளை கடுமையாக்கியது. இருப்பினும் கூட அமெரிக்காவில் கல்வி பயிலவிரும்புவோரின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்,தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கல்வி பயில செல்வோரின் எண்ணிக்கைஅதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
உலக அளவில் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.இதற்கு வெளிநாடுகளுக்கு போய் படிப்பது கூடுதல் போனஸாக அமைகிறது.இதனால் தான் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க மாணவர்கள் விரும்புகிறார்கள்.
கடந்த 2004ம் ஆண்டு வெளிநாட்டு மாணவர்கள் தங்களது உயர் கல்விக்கு அதிகம்தேர்ந்தெடுத்த நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய வல்லரசுநாடுகள் தான். கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்த நாடுகளில் கல்விபயில சேர்ந்துள்ளனர்.
அதேசமயம், ஆஸ்திரேலியாவில் படிக்கவும் அதிக அளவிலான வெளிநாட்டுமாணவர்கள் விரும்புகிறார்கள். இங்குள்ள பல்கலைக் கழகங்களில் 17 சதவீதவெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கிலாந்தில் 13.4 சதவீதம் பேரும்,ஸ்விட்சர்லாந்தில் 12.7 சதவீதம் பேரும் படிக்கிறார்கள்.
வெளிநாடுகளில் படிப்போரில் பெரும்பான்மையானவர்கள் ஆசிய நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள். மொத்தம் 45 சதவீதம் பேர் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் சீனர்கள் 15 சதவீதம் பேர் ஆவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications