தடையை மீறி கோவிலில் நுழைந்த தலித் மக்கள்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கொசப்பாடி கிராமத்தில் உள்ள கோவிலில் தலித் சமூகத்தினர்நுழைந்து சாமி கும்பிட்டதால் அங்கு அவர்களுக்கும், இன்னொரு சமூகத்தினருக்கும்இடையே மோதல் வெடித்தது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது கொசப்பாடி கிராமம். இங்குள்ளகோவிலில் விழா எடுத்து சிறப்பாக கொண்டாட அக்கிராமத்தைச் சேர்ந்த தலித்சமூகத்தினர் முடிவு செய்தனர். ஆனால் இதற்கு இன்னொரு ஜாதியினர் எதிர்ப்புதெரிவித்தனர். கோவிலுக்குள் தலித் மக்கள் நுழையக் கூடாது என ஆட்சேபித்தனர்.இதனால் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் ஜெயபால் கிராமத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சந்தித்துப்பேசினார்.
அப்போது, கோவிலின் இரண்டாவது நுழைவாயில் வரை மட்டும் தான் தலித்சமூகத்தினரை அனுமதிப்போம் என இன்னொரு சமூகத்தினர் கூறினர்.
இந் நிலையில், இன்று காலை 50க்கும் மேற்பட்ட தலித் சமூகத்தினர் கோவில் வாசலைதிறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டனர். இதனால்கோபமடைந்த எதிர் தரப்பினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் மீது தாக்குதல்நிடத்தினர்.
இதில் சில போலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்திவன்முறையில் இறங்கிய கும்பலை விரட்டியடித்தனர்.
தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் கடலூரிலிருந்து ஆயுதப் படைபோலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தவர்களை கண்டித்துசங்கராபுரம் சாலையில், 150க்கும் மேற்பட்ட தலித் சமுதாய மக்கள் சாலை மறியலில்ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications