அண்ணா பிறந்த நாள்: 472 கைதிகள் விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நல்லெண்ண அடிப்படையில், 472 ஆயுள்தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 98வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி சிறையில் 10 ஆண்டுகளைக் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள்நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்வர்கருணாநிதி அறிவித்திருந்தார்.
இதன்படி 472 கைதிகள் தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலிருந்துவிடுவிக்கப்பட்டனர். இவர்களில் 16 பேர் பெண்கள் ஆவர்.
ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாள், காந்தி பிறந்த நாள் உள்ளிட்ட முக்கியநிகழ்வுகளின்போது கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதுபல ஆண்டுகளாக தமிழகத்தில் அமலில் இருந்து வந்தது.
ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த முறை அமலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications