வேட்பாளரை நிறுத்தும் ரஜினி ரசிகர் மன்றம்
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ரஜினிகாந்த் ரசிகர்மன்றம் முடிவு செய்துள்ளது.
அரசியலுக்கு வராமல் தங்களது தலைவர் டேக்கா காட்டி வருவதால்வெறுப்படைந்துள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஒவ்வொரு தேர்தலின்போதும்பிரச்சனை கிளப்பி வருகின்றனர்.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக காரைக்குடியில்மாநாடே நடத்தினர்.
விஜய்காந்த் அரசியலுக்கு வந்து, தேர்தலை சந்தித்து, தனது மன்றத்தினரை கட்சிநிர்வாகிகளாவும் மாற்றிவிட்ட நிலையில் வெள்ளை வேட்டி கனவில் இருக்கும் ரஜினிரசிகர் மன்றத்தினரில் ஒரு பிரிவினர் வெறுத்துப் போயுள்ளனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுக்கு ஆதரவாக ரஜினி மன்றத்தினர்காரைக்குடியில் மாநாடே நடத்தினர். ஆனால், தனது ரசிகர்களின் இந்தச் செயல்களைரஜினி கண்டித்து வருகிறார்.
இந் நிலையில் மதுரை மத்திய தொகுதிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது அந்த மாவட்ட ரஜினி மன்றம் முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில், ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்ற நிர்வாகிகள் கூடிஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் மதுரை இடைத் தேர்தலில் போட்டியிடுவதுஎன முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மதுரை மாவட்ட மற்றும் மத்திய தொகுதி மன்ற நிர்வாகிகளை சந்தித்துப்பேசி வருகிற 20ம் தேதி வேட்பாளரை அறிவித்து 22ம் தேதி வேட்பு மனு தாக்கல்செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரஜினியின் அனுமதி பெறப்பட்டதாகத் தெரியவில்லை.
விஜய்காந்துக்கு படக்குக்கு சிக்கல்:
இதற்கிடையே மதுரையில், விஜயகாந்த் நடித்த பேரரசு பட பேனர்கள், கட் அவுட்கள்,போஸ்டர்களை வைக்க தேர்தல் அதிகாரி தடை விதித்துள்ளார்.
இடைத் தேர்தலையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
மதுரை நகரில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கட்-அவுட்கள், டிஜிட்டல்விளம்பரப் பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற தேர்தல் அதிகாரிஉத்தரவிட்டுள்ளார்.
அதே போல அரசியல்வாதியாகிவிட்ட விஜயகாந்த் நடித்துள்ள பேரரசு படபோஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்களையும் அகற்ற தேர்தல் அதிகாரி மூக்கையாஉத்தரவிட்டுள்ளார். மதுரையில் 3 தியேட்டர்களில் இப்படம் வெளியாகியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இவரது கட்சியும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதால் பேரரசு படம் தொடர்பானபோஸ்டர்களை மதுரை நகரில் எங்கும் ஒட்டக் கூடாது என்று தேர்தல் அதிகாரி தடைவிதித்துள்ளதால் படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள், கட்-அவுட்கள், பேனர்களைதியேட்டருக்குள்ளேயே வைக்க வேண்டிய நலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக மீது புகார்:
இதுகுறித்து மூக்கையா கூறுகையில்,
மதுரை நகர எல்லைக்குள் அரசியல் தலைவர்களின் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல்பலகைகள் உள்ளிட்டவற்ரை உடனடியாக அகற்ற வேண்டும். விஜயகாந்த்தின் பேரரசுபட போஸ்டர்களும் இதில் அடங்கும். தியேட்டருக்குள் மட்டும்தான் இப்படம்சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் இடம்பெற வேண்டும்.
தேர்தல் ஆணைய விதிப்படி மனுதாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரின்அறைக்கு வேட்பாளருடன் 6 பேர் மட்டுமே வர வேண்டும். ஆனால் இன்று அதிமுகவேட்பாளர் ராஜன் செல்லப்பா மனு தாக்கல் செய்ய வந்தபோது அவருடன் 30க்கும்மேற்பட்டோர் புகுந்து விட்டனர்.
தேர்தல் விதிமறைப்படி இது தவறு. மேலும் வேட்பாளர்கள் ஊர்வலமாக வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 3 கார்களில் மட்டுமே தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திற்குவர முடியும். குறிப்பிட்ட அளவு தொண்டர்கள் மட்டுமே உடன் வர வேண்டும்.ஆனால் ராஜன் செல்லப்பா வந்தபோது எல்லாமே மீறப்பட்டுவிட்டது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வேன். அவர்கள் உரிய நடவடிக்கைஎடுப்பார்கள் என்று கூறினார் மூக்கையா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications