அக்டோபர் 13, 15ல் உள்ளாட்சித் தேர்தல்?
சென்னை:
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும்எனத் தெரிகிறது. தேர்தல் தேதிகளை இன்றிரவு தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் ஆயுட்காலம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்துதேர்தல் நடத்துவது தொடர்பான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன. அனைத்து ஏற்பாடுகளும்முடிந்துள்ள நிலையில் தேர்தல் தேதி குறித்து சமீபத்தில் தேர்தல் ஆணையர் சந்திரசேகரன், காவல்துறை உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தற்போது தேதி முடிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. இன்றிரவு உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிகளைதேர்தல் ஆணையர் சந்திரசேகர் அறிவிக்கிறார். இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அக்டோபர் 13ம் தேதியும், மற்ற அமைப்புகளுக்கு 15ம் தேதியும்தேர்தல் நடைபெறலாம் எனத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் 4.64 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 5 லட்சம் தேர்தல் பணியாளர்கள்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த தேர்தல் வாக்குச் சீட்டு அடிப்படையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஓட்டுப் பெட்டிகள் ஏற்கனவே தயார்நிலையில் உள்ளன. கடந்த முறை நடந்தது போல இல்லாமல் இந்த முறை கவுன்சிலர்களுக்கு மட்டும் தேர்தல்நடைபெறும்.
மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்களை, கவுன்சிலர்களே நேரடியாகதேர்ந்தெடுப்பார்கள்.
மதுரை, சேலம் மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, நெல்லை மேயர் பதவிகள் பொதுப்பதவிகளாக மாற்றப்பட்டுள்ளது.
50% இடங்களில் திமுக போட்டி?:
இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக 50 சதவீத இடங்களில் போட்டியியிடும் எனத் தெரிகிறது.இதுதொடர்பாக நாளை (20ம் தேதி) கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனைநடத்தவுள்ளார்.
நாளை திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கருணாநிதி கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில்உள்ளாட்சித் தேர்தல், மதுரை மத்திய தொகுதி தேர்தல் களம் தொடர்பாக தலைவர்களுடன் கருணாநிதிஆலோசனை நடத்தவுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்பட்டாலும் கூட உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாகத்தான் மிக முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களில் போட்டியிட திமுக தீர்மானித்துள்ளது. இதை கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களிடம் கருணாநிதி தெரிவிக்கவுள்ளார். மீதமுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குப்பகிர்ந்தளிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தான் போட்டியிடும் இடங்களிலிருந்து காதர் மொஹைதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சிக்கு திமுக இடங்களை ஒதுக்கும் எனத் தெரிகிறது. கடந்த தேர்தலில வெற்றி பெற்ற இடங்களில் அந்தந்தகட்சிகளே மீண்டும் போட்டியிடும்.
அதிமுக:
அதே போல அதிமுகவும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டது.
கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இதுதவிர மேலும் சில சிறு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கப் போவதாக தேமுதிக ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது. பாஜக தரப்புஇன்னும் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications