முஸ்லீம்கள் கொலை-இலங்கை ராணுவமே காரணம்

Subscribe to Oneindia Tamil

அம்பாரை:

இலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் 11 முஸ்லீம்கள் வெட்டி படுகொலைசெய்யப்பட்டதற்கு இலங்கை ராணுவமும், அதிரடிப்படை போலீஸாரும் தான்காரணம் என பெரும்பாலான முஸ்லீம்களும் அப் பகுதியில் சம்பவத்தை நேரில்பார்த்தவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாரை மாவட்டத்தில் பொட்டுவில் என்ற இடத்தில்11 முஸ்லீம் தொழிலாளர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்தத்தாக்குதலில் ஒருவர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தார்.

சரமாரியாக வெட்டப்பட்ட 11 பேரின் உடல்களும் அருகில் உள்ள காட்டுப் பகுதியில்கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என இலங்கை ராணுவம்குற்றம் சாட்டியது. சில முஸ்லீம்கள் இந்தக் குற்றச்சாட்டை கூறியதாக ராய்ட்டர்ஸ்செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் இதை புலிகள் மறுத்தனர். சம்பவம் நடந்திருப்பது ராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில். இங்கு எப்படி நாங்கள் தாக்குதல் நடத்தியிருக்கமுடியும் என்று புலிகள் கேட்டுள்ளனர்.

மேலும் சிங்கள ராணுவமும் சிங்கள போலீஸின் சிறப்பு அதிரடிப் படையினரும் தான்(எஸ்.டி.எப்) இந்த பாதகச் செயலை செய்துள்ளதாக அப் பகுதி முஸ்லீம்சமுதாயத்தினரில் பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அம்பாரை மற்றும் பொட்டுவில் ஆகிய இடங்களில் உள்ள போலீஸாரை உடனடியாககூண்டோடு மாற்ற வேண்டும் என்றும் இந்தப் படுகொலைகள் குறித்து விரிவானவிசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் 11 தொழிலாளர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளஅம்பாரை மசூதி முன்பு கூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த சம்பவம்காரணமாக சிங்கள ராணுவத்திற்கும், முஸ்லீம் சமுதாயத்தினருக்கும் இடையே கடும்மோதல் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதையடுத்து இலங்கை காவல்துறை தலைவர்அம்பாரைக்கு விரைந்து முஸ்லீம் சமுதாயத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

வழக்கம் போல இந்த தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் மீது போட்டது இலங்கைராணுவம். ஆனால் புலிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

தற்போது உள்ளூர் முஸ்லீம்கள் குற்றம் சாட்டுவதைப் பார்த்தால் ராணுவமும்,போலீஸும் சேர்ந்துதான் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்றசந்தேகம் வலுத்துள்ளது.

தமிழர்கள்-முஸ்லீம்கள் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் இந்தக்கொலைச் சதியை இலங்கை ராணுவம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே குளம் வெட்டுவது தொடர்பாக முஸ்லீம்களுக்கும், சிங்களர்களுக்கும்இடையே கருத்து மோதல் இருந்து வந்தது. இந் நிலையில்தான் 11 முஸ்லீம்தொழிலாளர்களை ராணுவத்தின் அதிரடிப்படை கொடூரமாக கொன்று குவித்துள்ளது.

கொல்லப்பட்ட 11 பேரின் கை, கால்களை கட்டிப் போட்ட பின்னர் கண்களைப்பிடுங்கியும், சரமாரியாக வெட்டித் தள்ளியும் மிக பயங்கரமாக கொலை செய்துள்ளனர்சிங்கள ராணுவத்தின் அதிரடிப்படையினர்.

மேலும் இந்தப் படுகொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு கிடையாது.இது முழுக்க முழுக்க சிங்கள ராணுவத்தின் அதிரடிப்படையினரின் கொடூரச்செயல்தான் என்று இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர்கோரியுள்ளார்.

அப்பாவி மக்களை கொன்று குவித்து விட்டு விடுதலைப் புலிகள் மீது பழி போட்டுவரும் சிங்கள ராணுவத்தின் இந்த மோசமான செயல் பெரும் அதிர்ச்சி அலைகளைஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உலகின் மிக மோசமான, மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில்இலங்கையை அமெரிக்கா சேர்த்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள்ஆணையத்திலிருந்தும் இலங்கை வெளியேற்றப்படவுள்ளது என்பதும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+