தேர்தல் மன்னனின் 80வது போட்டி!
மதுரை:
தேர்தல் மன்னன் என்று வர்ணிக்கப்படும் பத்மராஜன், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவது இது 80வது முறையாகும்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி வைத்தியம், பார்ட் டைம்பத்திரிக்கையாளர், கட்டிட காண்டிராக்டர் என பல முகம் இவருக்கு இருந்தாலும், தேர்தலில்போட்டியிடுவதையை முக்கிய கொள்கையாக வைத்துள்ளார் பத்மராஜன்.தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவில் எந்தத் தேர்தல் நடந்தாலும், முக்கியத் தலைவர்கள, பிரமுகர்களைஎதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்பது இவரது பொழுதுபோக்கு. இதுவரை 79 முறை தேர்தலில்போட்டியிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஆனால் இந்ததேர்தல்களில் இவரது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இந்த நிலையில் 80வது முறையாக நேற்று மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்பத்மராஜன். சட்டசபை, மக்களவைத் தேர்தல்களில் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்வதில்லை. தொடர்பான செய்திகள்புமுன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை எதிர்த்துபோட்டியிட்டுள்ளேன்.
முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களைஎதிர்த்துப் போட்டியிட்டுள்ளேன்.
எனது நோக்கம் வெற்றி பெறுவது அல்ல. அதிக தேர்தல்களில் போட்டியிட்டு சாதனை படைப்பதே எனதுலட்சியம். இப்போது எனது பெயர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே எனது ஆசை, லட்சியம், அதை அடையவே தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன்.
எனது மகன் ராஜராஜன் நம்பியார் மூன்றரை வயதாக இருக்கும் போதே பெருந்துரை இடைத் தேர்தலில் மனுதாக்கல் செய்தான். ஆனால் வயது குறைவாக இருந்ததால் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டனர் என்றார்பத்மராஜன்.
சாதனைக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதாக கூறும் பத்மராஜன் சொல்வதை கேட்கும்போதுவேதனையாகத்தான் இருக்கிறது!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications