ஜெவின் சிக்குன் குனியா அரசியல்-திமுக தாக்கு
சென்னை:
சிக்குன் குனியாவால் தமிழகத்தில் 232 பேர் உயிரிழந்திருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியிருப்பது தவறான தகவல் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
சிக்குன் குனியாவுக்கு ஏராளமானோர் பலியாகியிருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அப்படிஇறந்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட ஜெயலலிதா தயாரா என்று முதல்வர் கருணாநிதிசவால் விட்டிருந்தார்.இதற்கு நேற்று பதிலளித்த ஜெயலலிதா சிக்குன் குனியாவுக்கு 232 பேர் இறந்திருப்பதாக அறிக்கை ஒன்றில்தெரிவித்தார். இறந்தவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.
இந்த அறிக்கைக்கு ஆற்காடு வீராசாமி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
232 பேர் சிக்குன் குனியாவால் இறந்திருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் அவர் கொடுத்த பட்டியலில்இருந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை விசாரித்து பார்த்தபோது யாருமே சிக்குன் குனியாவால்இறக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவர் சிக்குன் குனியாவால் இறக்கவில்லை.நுரையீரல் புற்று நோய் காரணமாக இறந்திருப்பதாக அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பதில் அனுப்பியுள்ளார்.
இப்படித் தான் மற்றவர்களும் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர். யாருமே சிக்குன் குனியாவால்இறக்கவில்லை. ஜெயலலிதா இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளார். ஆனால் சென்னையைச் சேர்ந்தயாருமே இப்பட்டியலில் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் சென்னையில் தான் அதிகம் பேர் இறந்திருப்பதாக ஜெயலலிதா கூறி வந்தார்.
சென்னையில் இறந்ததாக பட்டியலை வெளியிட்டால் குட்டு உடைந்து விடுமே என்ற பயத்தில் தான் அந்தப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை. சிக்குன் குனியாவை தேவையில்லாமல் அரசியலாக்குகிறார்ஜெயலலிதா என்று கூறியுள்ளார்ஆற்காடு வீராசாமி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications