விவாகரத்துக்கு விரையும் சீன வாத்தியார்கள்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்:

விதவைகளுக்கும், மனைவிகளை விவாகரத்து செய்தோருக்கும் மட்டுமே ஆசிரியர்வேலை என சீனாவின் லியோனிங் மாகாண நிர்வாகம் அறிவித்துள்ளதால், தங்களதுமனைவிகளை விவாகரத்து செய்ய சீன ஆசிரியர்கள் நீதிமன்றங்களுக்குவிரைந்துள்ளனர்.

சீனாவில் தொடக்கப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு அரசு திடீரென ஒருஉத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மனைவிகளை விட்டு பிரிந்து வாழும்ஆசிரியர்கள் மற்றும் கணவரை இழந்த ஆசிரியைகளுக்கு மட்டுமே ஆசிரியர் வேலைவழங்கப்படும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவால் பல ஆசிரியர்கள் கலங்கியுள்ளனர். அரசின் இந்த உத்தரவிலிருந்துதங்களது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள தங்களது மனைவிகளை துறக்கஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

அவசரம் அவசரமாக மனைவிகளை விவாகரத்து செய்ய கோரி விண்ணப்பங்களைகொடுத்து வருகின்றனராம். அரசின் உத்தரவு வெளியான சில நாட்களிலேயேநூற்றுக்கும் மேலான ஆசிரியர்கள் தங்களது மனைவிகளை விவாகரத்து செய்யவிரும்பி விண்ணப்பித்துள்ளனராம்.

லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த டாண்டோங் நகரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் விவகாரத்துக்கு விண்ணப்பிக்கச்சென்று விட்டதால் அந்தப் பள்ளியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்திங்கள் கிழமை வரை பள்ளிக்கு விடுமுறை விட்டு விட்டனராம்.

அரசின் புதிய உத்தரவுப்படி குழந்தைகளுடன் இருக்கும் விதவை ஆசிரியைகள்மற்றும் மனைவிகளை பிரிந்த கணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் வேலையைகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

பலருக்கு தங்களது மனைவிகளை பிரிய விருப்பம் இல்லை என்றாலும கூடவேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியில்லாமல் இப்படி இறங்கவேண்டியதாயிற்று என்று சில ஆசிரியர்கள் நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகின்றனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+