திமுக: கெளஸ் பாட்ஷாவின் சொத்து மதிப்பு
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்ஷா, தனதுசொத்து மதிப்பு ரூ. 10.50 லட்சம் என தெரிவித்துள்ளார்.
கெளஸ் பாட்ஷா தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் சொத்து குறித்தவிவரத்தையும் இணைத்துள்ளார். அதில்,என்னிடம் ரூ. 10.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், சொத்துக்கள் இருப்பதாகவும், வரிசெலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பாட்ஷாவின் சொத்துப் பட்டியல்:
என் பெயரில் வங்கியில் ரூ. 10,000 ரொக்கமாகவும், ரூ. 43,000 டெபாசிட்டாகவும்முதலீடு செய்யப்பட்டுள்ளது.
என்னிடம் ரூ. 36,000 மதிப்புள்ள 60 கிராம் தங்க நகைகளும், மனைவி மகிராபானுவிடம் ரூ. 3.84 லட்சம் மதிப்பிலான 640 கிராம் தங்க நகைகளும் உள்ளன.
காஜிமார் தெருவில் ரூ. 6 லட்சத்தில் 520 சதுர அடி வீடு உள்ளது.
வருமான வரி செலுத்தும் அளவுக்கு எனக்கு வருவாய் கிடையாது.
மதுரை யு.சி. மேல்நிலைப்பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் மீதுவழக்குகள் ஏதும் கிடையாது என பாட்ஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications