பெல்காமில் கர்நாடக சட்டசபை கூட்டம்!
பெல்காம்:
கர்நாடக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக பெங்களூருக்கு வெளியே, பெல்காம் நகரில் வரும் 25ம்தேதி சட்டசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள எல்லைப் புற பகுதியான பெல்காம் உள்ளிட்ட மகாராஷ்டிரத்தை ஒட்டிய பகுதிகளைமராட்டிய மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே போராட்டம் நடந்து வருகிறது. இங்குமராட்டியர்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர்.கர்நாடகத்தின் 3வது பெரிய நகரமான பெல்காம் வட கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. இந்தமாவட்டத்தை மகாராஷ்டிராவுடன் சேர்க்க வேண்டும் என அம்மாநிலமும் பல காலமாக கோரி வருகிறது.
மேலும் பெல்காமை மராட்டிய மாநிலத்துடன் இணைக்கக் கோரி வரும் மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதி(எம்.இ.எஸ்.)கட்சியைச் சேர்ந்தவர்களே இந்தப் பகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் வென்று வருகின்றனர்.
ஆனால், இந்தக் கோரிக்கையை கர்நாடகம் தீவிரமாக எதிர்த்து வருகிறது. கன்னட சாளுவளி உள்ளிட்ட கட்சிகள்பெல்காம் எம்எல்ஏக்களை தாக்குதவது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.
சமீபத்தில் பெல்காமை மகாராஷ்டிரத்துடன் இணைக்கக் கோரி பெல்காம் நகராட்சியில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த நகராட்சி மீது கடும் நடவடிக்கை எடுத்தது கர்நாடக அரசு.
இந் நிலையில் பெல்காம் கர்நாடகத்தில் தான் இணைந்திருக்க வேண்டும் என்று கோரி மாநில அளவில் பந்த்நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் இந்த விவகாரம் பெரிதாகி வருகிறது.
இந் நிலையில் பெல்காம் கர்நாடகத்தின் ஒரு பகுதி தான் என்பதை தெளிவாக்கும் வகையில் கர்நாடகசட்டசபையின் சிறப்புக் கூட்டம் 25ம் தேதி பெல்காம் நகரில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பெங்களூர் விதான் செளதா வளாகத்தில் உள்ளசட்டசபைக்கு வெளியே தற்போது தான் முதல் முறையாக சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
பெங்களூருக்கு வெளியே சட்டசபைக் கூட்டத்தை நடத்துவது என்பது இப்போது உதித்த யோசனை அல்ல.குண்டுராவ் முதல்வராக இருந்தபோது இதுகுறித்து யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டசபைக்கூட்டத்துக்குப் பதில், அமைச்சரவைக் கூட்டத்தை பெல்காம் நகரில் நடத்தலாம் என அப்போது தீர்மானிக்கப்பட்டுஅதன்படியே நடத்தப்பட்டது.
பின்னர் வந்த அரசுகளும் சட்டசபைக் கூட்டத்தை பெங்களூருக்கு வெளியே நடத்துவது குறித்த யோசனையைநடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை. தரம்சிங் முதல்வராக இருந்த போது இக்கோரிக்கை எழுப்பப்பட்டது.அப்போது குல்பர்கா நகரையும் இந்தப் பட்டியலில் சேர்த்தார். இருப்பினும் இதுதொடர்பான நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அந்த கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தது.
ஆனால் தற்போது முதல்வராக உள்ள குமாரசாமி தான், இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம் விதானசெளதாவுக்கு வெளியே நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டம் என்ற பெயர் பெல்காமுக்குக் கிடைத்துள்ளது.
பெல்காமில் உள்ள கர்நாடக லிங்காயத் கழகத்திற்குச் சொந்தமான டாக்டர் ஜிர்கே ஆடிட்டோரியத்தில் சட்டசபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. சட்ட பேரவை கூட்டம் ஜிர்கே ஆடிட்டோரியத்திலும், சட்ட மேலவைக் கூட்டம் அதேலிங்காயத் கழகத்திற்குச் சொந்தமான ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி வளாகத்திலும் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
பெல்காமை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளவழக்கில், சமீபத்தில் மத்திய அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அது மகாராஷ்டிர அரசின் கோரிக்கைக்குபாதகமாக இருந்தது. ஆனால் மத்திய அரசு அந்த அறிக்கையை பின்னர் திரும்பப் பெற்றது.
இந் நிலையில் பெல்காமில் நடைபெறவுள்ள சிறப்பு சட்டசபைக் கூட்டத்துக்குப் போட்டியாக போட்டி சட்டசபைக்கூட்டத்தை நடத்த தற்போது மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதி முடிவு செய்துள்ளது. மராத்தி பேசும் மக்களின்கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இந்த போட்டி கூட்டம் நடத்தப்படுகிறது.
ஆனால், போட்டி கூட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் குமாரசாமிஎச்சரித்துள்ளார். ஆனால் இதைப் பற்றிக் கவலைப்படாமல் மகாராஷ்டிர ஏகிகிரண் சமிதி தலைவர் தீபக் தால்விகர்நாடக, மகாராஷ்டிர மாநில எல்லைப் பகுதி கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பெல்காமில் நடைபெறும் போட்டி கூட்டத்திற்கு வருமாறு எல்லைப்புறங்களில் வசித்து வரும் மராத்தி மொழிபேசுவோருக்கு அழைப்பு விடுத்து வருகிறார். மராத்தி மொழி பேசுவோரை அவமானப்படுத்தம் வகையில்,கர்நாடக அரசு சட்டசபைக் கூட்டத்தை பெல்காமில் கூட்டியிருப்பதாக அவர் கூறி வருகிறார்.
ஆனால் கன்னட அமைப்புகள் குமாரசாமி அரசின் நடவடிக்கையை பாராட்டியுள்ளன. பெல்காம் கர்நாடகத்திற்கேசொந்தம் என்பதை மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் குமாரசாமி அரசு புரிய வைத்துள்ளதாக அவர்கள்கூறுகின்றனர்.
மேலும் இத்தகைய சிறப்பான முடிவை எடுத்த குமாரசாமிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் மற்றும்பிற கட்சி தலைவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் கன்னட அமைப்புகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications