டெல்லியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு-3 பேர் பலி
டெல்லி:
டெல்லியில் வணிகர்கள் நடத்திய கடையடைப்புப் போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. வன்முறையைத்தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களை இயக்குவதை டெல்லி மாநகராட்சி தடைசெய்துள்ளது. இதுபோல நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களை கணக்கெடுத்து அவற்றுக்கு சீல் வைத்தும் வருகிறது.மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மத்திய அரசு,குடியிருப்புகளுக்கு மத்தியிலும் கடைகளை வைக்கலாம் என தெரிவித்தது. இருப்பினும் டெல்லி மாநகராட்சியின்நடவடிக்கை நிற்கவில்லை.
இதையடுத்து நேற்று அடையாள வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இதையடுத்து நேற்று 7 லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. பந்த்தும் நடத்தப்பட்டது.இதற்கு பாஜக, அகாலிதளம், சுதேசி ஜாக்கிரண் மஞ்ச் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
கடைகள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் என எந்த வணிக நிறுவனமும் இயங்கவில்லை.கடையடைப்பில் ஈடுபட்ட வர்த்தகர்கள் நகரில் ஆங்காங்கே கூடி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.பல இடங்களில் பஸ்கள் மீது கல் வீசித் தாக்கப்பட்டது.
சதாராவில் ரயில் மீது கல் வீசப்பட்டதால் அங்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாஸ்திரி பார்க் ரயில்நிலையத்தோடு மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சீலாம்பூர் என்ற இடத்தில்தான் பெரும் கலவரம் மூண்டது. அங்கு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டவர்களை கலைக்க போலீஸார் முயன்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆத்திரமடைந்தனர்.போலீஸாரை கல் வீசித் தாக்கினர்.
இதில் துணை ஆணையர் தேவேஷ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.மேலும் தேவேஷின் ஜீப்பையும் வணிகர் கும்பல் அடித்து நொறுக்கியது.
முதலில் தடியடி நடத்தி கும்பலைக் கலைக்க போலீஸார் முயன்றனர். அது முடியாததால், கண்ணீர்ப் புகை குண்டுவீசப்பட்டது. அப்படியும் கூட்டம் கலையாததால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 7 வயது சிறுவன்உள்பட 3 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர்.
அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. இந்த ரகளையில், காது கேளாத சிறுவர்கள் வந்த பேருந்தும்நடுவே சிக்கிக் கொண்டது. சுமார் 6 மணி நேரம் அந்தப் பேருந்து அங்கிருந்து நகர முடியாமல் சிக்கிக்கொண்டதால், உள்ளே இருந்த மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளானார்கள்.
டெல்லி முழுவதும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியலுமாக இருந்ததாக சாலைப் போக்குவரத்தும், ரயில்போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த ஒரு நாள் போராட்டத்தால் ரூ. 200 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிக்கு ரூ. 15 கோடி வரை வரி இழப்புஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications