பிரதமருடன் இலங்கை தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு
டெல்லி:
இலங்கையிலிருந்து வந்துள்ள தமிழ் எம்.பிக்கள் குழுவினர் இன்று பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப்பேசுகின்றனர்.
இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்கள் சம்பந்தம்,சேனாதி ராஜா, கஜேந்திர குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ்பிரேமசந்திரன் ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது.டெல்லி வந்துள்ள இந்த எம்.பிக்கள் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமது,வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சிவசங்கர் மேனன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில், இலங்கை விவகாரத்தில்இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக்கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்கமுடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள்நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்.
இன்று பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோரை தமிழ் எம்.பிக்கள்சந்தித்துப் பேசவுள்ளனர். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, முன்னாள்பிரதமர் வாஜ்பாய் ஆகியோரையும் அவர்கள் சந்திக்கிறார்கள்.
அதன் பின்னர் சென்னை வரும் அவர்கள் முதல்வர் கருணாநிதியையும்சந்திக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications