பெரியாறு அணை: கேரளம் மீண்டும் பிடிவாதம்
திருவனந்தபுரம்:
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை மேலும் உயர்த்த முடியாது என கேரள சட்டசபையில்நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்.கே.பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
கேரளா, தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணையின் தற்போதைய உயரம் 136 அடி. இந்தஅணையின் உயரத்தை அதிகரித்தால் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். இதனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்ந்த தமிழக அரசு கோரியது.இதை கேரளம் ஏற்காததால் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அணையின்உயரத்தை 142 அடியாக உயர்ந்த உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த முடியாது என்றும்,அமல்படுத்தினால் அணையை ஒட்டியுள்ள 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் உச்ச நீதிமன்றத்தில்கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறது.
இந் நிலையில் பிரதமர் மன்மேகான் சிங்கை, கேரள முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள்சந்தித்து இப்பிரச்சனை குறித்து பேசினார்கள்.
நேற்று கேரள சட்டசபையில் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சர்என்.கே.பிரேமச்சந்திரன் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை 110 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய அணை. அது தற்போது மிகவும்பலவீனமாக இருக்கிறது. எனவே அதன் தற்போதைய உயரத்தை மேலும் உயர்த்த முடியாது.
அணையில் உயரத்தை அதிகமாக்கினால், அணை உடையும் ஆபத்து ஏற்படும். இதனால் இடுக்கி, எர்ணாகுளம்,ஆலப்புழை உள்பட 5 மாவட்ட மக்களின் உயிர், உடமைகள் பாதிக்கப்படும். சமீபத்தில் பெரியாறு அணையின்பலத்தையும், கழிவு நீரையும் ஆய்வு செய்யும் குழுவினர், அணைக்கு சென்று சோதனை நடத்தினார்கள். இதற்குதமிழக அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
கடந்த ஆகஸ்டு 18ம் தேதி அணையில் பகுதியில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியால் அணையின்மேல்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மிகச் சிறிய அதிர்வு ஏற்பட்டால் கூட அணை பலம் இழக்க வாய்ப்புஉண்டு என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வருக்கு, கேரள முதல்வர் கடிதம் எழுதி இருக்கிறார். இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கேரள முதல்வரின் கருத்துக்கு, தமிழக முதல்வரிடம் இருந்து திருப்தியான பதில்வரவில்லை என அவர் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications