குல்பர்காவிலிருந்து பேசிய நக்சல் ரகு
சென்னை:
ராக்கெட் லாஞ்சர் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் நக்சலைட் ரகு, குல்பர்காவில்பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.சென்னையிலிருந்து ஆந்திர நக்சலைட்டுகளுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் அனுப்பப்பட்டவிவகாரத்தில் அம்பத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் போலீஸார் தீவிர விசாரணைநடத்தி லாஞ்சர்களை தயாரித்த தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். லாஞ்சர்களுக்கு ஆர்டர்கொடுத்த நக்சலைட் ரகு மற்றும் அவரது நக்சலைட் மனைவி சுதாராணி இருவரும்தலைமறைவாகி விட்டனர்.
![]() |
தப்பி ஓடுவதற்கு முன் ரகு, குமாருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போதுஎன்னைப் பற்றி போலீஸ் விசாரிக்கிறதா, தேடினார்களா. ஒருவேளை தேடி வந்தால்அவர்களிடம் எதுவும் கூறாதீர்கள். யாராலும் என்னைப் பிடிக்க முடியாது என்றுகூறியுள்ளார்.
குமாரின் செல்போனை போலீசார் பரிசோதித்துப் பார்த்தபோது கர்நாடக மாநிலம்குல்பர்காவிலிருந்து ரகு பேசியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குல்பர்காவுக்கு போலீஸ் படை விரைந்துள்ளது.













Click it and Unblock the Notifications