அதிமுக: ராஜன் செல்லப்பாவின் சொத்து மதிப்பு
மதுரை:
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜன் செல்லப்பா தனக்கு ரூ. 49லட்சம் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.அதன் விவரம்:
வங்கியில் என் பெயரில் ரூ.75,000, மனைவி மகேஸ்வரி பெயரில் ரூ.86,000 ரொக்கம், இன்னொரு வங்கியில்என் பெயரில் ரூ.49,079, மனைவி பெயரில் ரூ.26,534மும் டெபாஸிட் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 25,000க்கு எல்ஐசி பாலிஸி, ரூ.10,000க்கு பஜாஜ் அலயன்ஸ் பாலிஸி, என் பெயரில் ஒரு அம்பாஸடர் கார்,மனைவி பெயரில் ஒரு ஃபோர்டு ஐகான் கார், ஒரு மகேந்திரா ஸ்கார்பியோ கார் ஆகியவை உள்ளன.
என்னிடம் ரூ.73,920 மதிப்புள்ள நகைகளும், மனைவியிடம் ரூ.6,04,800 மதிப்புள்ள தங்க நகைகளும் உள்ளன.
ரூ. 9,00,000 முதலீட்டில் சுய தொழில் செய்து வருகிறேன். என் பெயரில் மதுரை மாவட்ட கிலிபட்டியில்ரூ.1,51,206 மதிப்பிலான 7.34 ஏக்கர் நிலம், வட பழஞ்சியில் ரூ.7,55,000 மதிப்பிலான 9.44 ஏக்கர் நிலம்,கிலிபட்டி கிராமத்தில் ரூ.12,000 மதிப்புள்ள 72 சென்ட் நிலம், கரடிக்கல் கிராமத்தில் ரூ. 90,000 மதிப்பிலான 78சென்ட் நிலம் உள்ளது.
மதுரை பசுமலையில் 22 சென்டில் அமைந்துள்ள ரூ. 13.50,000 மதிப்பிலான வீட்டில் எனக்கு 50% சதவீத பங்குஉள்ளது. இதில் என் மனைவியின் பங்கு ரூ. 4.50,000.
மதுரை தல்லாகுளம் அழகர் கோயில் ரோட்டிலுள்ள 33.5 சென்டில் அமைந்துள்ள வீட்டில் மனைவிக்கு ஏழில் ஒருபங்கு உள்ளது.
என் மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 49,00,134. இவ்வாறு ராஜன் செல்லப்பா கணக்கு காண்பித்துள்ளார்.
மேலும் தன் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் 1998ம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத நிலையில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவர் நடப்பாண்டு வரைவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications