13,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாகிறார்கள்!
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 13,000 அரசு ஊழியர்களை சிறப்புத் தேர்வு நடத்திநிரந்தரமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.மேலும், தலைமைச் செயலகத்திற்கு 1000 பேரும், மாவட்டங்களுக்கு தலா 500 பேரும் தற்காலிக ஊழியர்களாகதேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ. 4000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம்13,000 பேர் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.
தங்களது பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வந்தனர். இந்த நிலையில், இந்த தற்காலிகஊழியர்களுக்கு தமிழக அரசுப் பணி தேர்வாணையம் மூலம் சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அவர்களைநிரந்தரமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர் திரிபாதிபிறப்பித்துள்ளார். இவர்களின் பணிநிரந்தரம் ஆனால் சம்பளம் ரூ. 8000க்கு மேல் கிடைக்கும்.
இதுதவிர, கடந்த அதிமுக ஆட்சியில், வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்ட போது, அதிர்ச்சியாலும், மன உளைச்சலாலும் இறந்தனர். இவர்களின் வாரிசுகளுக்குகருணை அடிப்படையில், வேலை வாய்ப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications