திமுகவின் சூழ்ச்சி, தந்திரம்-வைகோ எச்சரிக்கை
சென்னை:
திமுக பணத்தை வைத்துக் கொண்டு உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்றுநடந்தது. அதில் வைகோ பேசியதாவது,உள்ளாட்சி தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுகிறது. பழைய முறை இருந்தால் திமுகவுக்கு சரிவு ஏற்படும்என்பதற்காக புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டிகிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலிலும் அதுபோல நிலை ஏற்படும் என்பதற்காகவும்,நெருக்கடியான அரசியல் சூழ்நிலை உருவாகும் என்பதற்காகவும் உள்ளாட்சி அமைப்பில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
இதில் வேதனை என்னவென்றால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு கூட தெரியாமல் இந்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது. இதை வெளியே சொல்ல முடியாமல் கூட்டணி கட்சிகள் புழுக்கத்தில் இருக்கின்றன.அவர்களுக்கு ஜால்ரா அடிக்கிறனர்.
இந்த புதிய முறையால் ஆளும் கட்சி தவிர எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். ஆளுங்கட்டியின்ர பணத்தைவைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். உள்ளாட்சி அமைப்பின் புதிய முறைக்கு பாமக, கம்யூனிஸ்டுகள்கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த புதிய தேர்தல் முறை திமுகவின் தந்திரம், சூழ்ச்சியான நடவடிக்கை ஆகும்என்றார்.
மதிமுக குழு:
இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து மதிமுக சார்பில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தைநடத்த குழுவை நியமித்துள்ளார் வைகோ.
இந்த குழுவில் அவைத் தலைவர் எல்.கணேசன் எம்பி, துணைத் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன்எம்பி, சத்யா, அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர்டிகே.சுப்பிரமணியம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications