அரைகச்சை, கழுத்துக் கச்சு, கொதி கெண்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களுக்காக 70 சின்னங்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 13 மற்றும் 15 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 2நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. தற்போது மனு தாக்கல்விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களுக்குரிய சின்னங்கள்வழங்கப்பட்டு விடும். சுயேச்சை வேட்பாளர்களுக்காக 70 சின்னங்களைஒதுக்கியுள்ளனர்.

கழுத்துக் கச்சு (கழுத்தில் கட்டும் டை), கொதி கெண்டி (கிண்ணம்), அரை கச்சை(பெல்ட்), குலையுடன் கூடிய தென்னை மரம், உடுக்கை, அரிக்கேன், உலகஉருண்டை, வைரம், மறை திருக்கி, அடையாளக் குறி, கிட்டார், முகம் பார்க்கும்கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி,

புட்டி, நீளக்குவளை, ஊஞ்சல், கத்தி, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி,மேற் சட்டை, கோப்பு அடுக்கும் அலமாரி, மத்தளம், முள் கரண்டி, கேஸ் சிலிண்டெர்,

மகளிர் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு, துப்பாக்கி, ஹாக்கி மட்டையும் பந்தும்,தீப்பெட்டி, கைப்பை, கரண்டி, தண்ணீர் குழாய், உலாவிற்கான தடி.

பதக்கம், கம்ப்யூட்டர், மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், டிஷ் ஆண்டெனா, பேருந்து,கேரம் போர்டு, மேசை மின்விசிறி, கோப்ரையும் தட்டும், பளு தூக்கும் கருவி, சட்டை,சட்டை பட்டி,

ரயில் தண்டவாளம், பெண்களின் மேலங்கி, முழுக்கால் சட்டை, பிளேடு, சிறு பெட்டி,மட்டை, இரட்டை நாதஸ்வரம், கைபம்பு, மை எழுது கோல், சாய்வு மேசை, மரஇருக்கை, புத்தகம், தீபம் என 70 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

3,000 வேட்பு மனுக்கள் தாக்கல்

இதற்கிடையே தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 3000 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல் நாளான நேற்று முன்தினம் சுயேச்சைகள் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். கிட்டத்தட்ட 400 பேர் முதல் நாளில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று 2வது நாளன்று ஏராளமான சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2,821 பேரும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 124 பேரும் மனு தாக்கல் செய்தள்ளனர். இன்றும்ஆயிரக்கணக்கான சுயேச்சைகள் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

ஆனால்ஸ அரசியல் கட்சிகள் சார்பில் இதுவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நாளை முதல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுதாக்கலை ஆரம்பிப்பார்கள் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+