மேயர்: தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி முடிவு
சென்னை:
மேயர், நகரசபை தலைவர் பதவிகளை பிரித்துக் கொள்வது குறித்து உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு முடிவுசெய்யலாம் என திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம் செய்யதுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள காரணத்தால் இடப் பங்கீட்டையும்,வேட்பாளர் தேர்வையும் விரைந்து முடிக்க எல்லா கட்சிகளும் முன்முரமாக உள்ளது.திமுக கூட்டணியில் இடப் பங்கீட்டை சுமூகமாக முடிப்பதற்கு திமுகவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமிதலைமையில் 6 பேர் குழு ஏற்படுத்தபட்டுள்ளது. இவர்கள் பாமக, கம்யூனிஸ்டு மற்றும் முஸ்லிம் லீக்தலைவர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மாவட்ட அளவில் யார், யாருக்கு எத்தனை இடம் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாவட்டதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளே இடப்பங்கீட்டை தங்களுக்குள் பேசி முடித்து கொள்ள அதிகாரம்வழங்கப்படுள்ளது. இந்த கருத்தை திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறியதாகதெரிகிறது.
இதனால் மாவட்ட அளவில் திமுக கூட்டணி கட்சியினர் வரும் ஞாயிறுகிழமைக்குள் இடப் பங்கீட்டை முடித்துக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் 6 மாநகராட்சி, 102 நகர சபைகள் உள்ளன. இவற்றுக்கான மேயர், துணை மேயர், தலைவர்,துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அடுத்த மாதம் 28ம் திேத நடைபெறவுள்ளது.
மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகளை தங்களுக்குள் எப்படி பங்கீட்டுக் கொள்வது என்பதை உள்ளாட்சித்தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என கடந்த புதன்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடத்ததிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகரசபைகளிலும் யார், யாருக்கு எத்தனை இடங்களில் வெல்கின்றனர் என்பதைவைத்து மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவியை பங்கீட்டுக் கொள்ள திமுக கூட்டணி தலைவர்கள்சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவி இடங்கள் எத்தனைஇடம் கிடைக்கும் என்ற தெளிவான விபரம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியவரும்.
என்றாலும் மாநகராட்சி, நகரசபைகளில் எந்தெந்த கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவது என்ற பேச்சுதொடர்ந்து நடந்து வருகிறது. காங்கிரஸ், பாமக கட்சியினர் தலா 2 மாநகராட்சிகளில் அதிக கவுன்சிலர்களைநிறுத்த வாய்பளிக்கும்படி கேட்டுள்ளனர். இதன்மூலம் மேயர் பதவியைப் பிடிக்க அக் கட்சிகள்திட்டமிட்டுள்ளன.
ஆனால் திமுக சுமார் 65% உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட நினைக்கிறது. எனவே காங்கிரஸ், பாமக,கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கேட்கும் இடங்கள் கிடைக்குமா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் இருப்பதால், அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கே பலநாட்களாகி விடும் என்பது மட்டும் உறுதி.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications