மிரட்டுது செல்போன் வைரஸ்!
மாஸ்கோ:
ரஷியாவில் செல்போன் வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அதை பயன்படுத்துவோர் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஜாவா சாப்ட்வேர் புரோகிராமை பயன்படுத்தி இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ்படுவேகமாக செல்போன்களில் பரவி வருவதால் செல்போன்கள் செயலிழந்து லாக் ஆகி வருகின்றன.இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப சாப்ட்வேரை தயாரிப்பவரும், காபர்ஸ்கி ஆய்வகத்தைச் சேர்ந்த நிபுணருமானஅலெக்சாண்டர் கோஸ்டவ் கூறுகையில், சாதாரண போன்களையும் கூட இந்த வைரஸ் புரோகிராம் பாதிக்கிறது.
இந்த வைரஸால் தாக்கப்படும் செல்போன்களில் இருந்து தொடர்ந்து எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்படுகின்றன.அந்த செல்போனின் கட்டணம் முழுவதும் காலியாகும் வரை எஸ்எம்எஸ்கள் தொடர்ந்து அனுப்பப்படுகின்றன.ஒரு கட்டத்தில் செல்போன்களே செயலிழப்பதோடு, அதன் தொகை இருப்பும் முழுமையாக காலியாகி விடுகிறது.
இதற்கு எதிரான புரோகிராமை உருவாக்குவது மிகவும் கடினமானதாகும். ரஷியாவில் தான் இந்த செல்போன்வைரஸ் முதலில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 20,000 செல்போன் வைரஸ்கள் உலா வருவதாககணக்கிடப்பட்டுள்ளது.
புளூடூத், வயர்லஸ் போன்களை பயன்படுத்துவோர் பொது இடங்களில் பயணிக்கும் போதும், ரயில்களில்பயணிக்கும் போதும் தங்களது போனை பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் தொல்லையைசமாளிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications