நாளை ஜம்ப் எம்எல்ஏ சண்முகம் முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

முக.ஸ்டாலின் குறித்து நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என அதிமுக எம்எல்ஏ எஸ்வி. சண்முகம்கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் முக.ஸ்டாலினை பாராட்டி பேசிய சண்முகத்தின் மீது அதிமுகவினர்மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து மதுரை அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர்சித்து சண்முகம் பேசினர். இது தொடர்பாக நேற்று திருக்குறளை முன்உதாரணமாக கூறி இது டரெய்லர் தான் என ஜெயலலிதா பதில் அளித்தார்.

ஜெயலலிதாவின் கருத்து தொடர்பாக சண்முகம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

முக.ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டத்தில் நான் பேசிய கருத்துக்களை ஜெயலலிதாவிடம் தவறாக எடுத்துசொல்லப்பட்டுள்ளது. அவர் என்னை நேரில் அழைத்து விளக்கம் கேட்டால் எனது பேச்சு பற்றி அவரிடம்விளக்கி கூற தயாராக இருக்கிறேன். இன்னும் அதிமுகவில் தான் நான் நீடிக்கிறேன்.

நான் கூறிய கருத்துக்களில் எந்த தவறும் இல்லை. அதில் இருந்து நான் பின் வாங்க போவது இல்லை. நாளைஎனது முக்கிய முடிவுகளை அறிவிக்க உள்ளேன். அப்போது ஜெயலலிதாவின் திருக்குறள் உதாரணங்களுக்கும்பதில் சொல்கிறேன் என அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+