70 புலிகள் பலி-ராணுவம்: எல்டிடிஈ மறுப்பு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த பயங்கர சண்டையில் 70 புலிகள்கொல்லப்பட்டதாக இலங்கை கூறியுள்ளதை எல்டிடிஈ மறுத்துள்ளது.

முல்லைத் தீவு அருகே அலம்பில் என்ற இடத்தில் இருந்து 25 படகுகளில் கடற்புலிகள் மட்டக்களப்புக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படை கப்பல்கள் வழி மறித்து தாக்கினர்.

இதில் புலிகளின் 11 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும், 70 புலிகள் கொல்லப்பட்டதாகவும் இலங்கை கடற்படைகூறியுள்ளது.

ஆனால், இதை புலிகள் மறுத்துள்ளனர். தங்கள் தரப்பில் 3 வீரர்கள் மட்டுமே பலியானதாக புலிகள்கூறியுள்ளனர்.

புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையன் கூறுகையில்,

5 மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 3 புலிகள் கொல்லப்பட்டனர். எங்களது படகுகள் ஏதும்சேதமடையவில்லை. இலங்கை கடற்படையின் துரோவா விரைவு படகுகள் இரண்டை நாங்கள்சேதப்படுத்தினோம்.

கடற்படை தரப்பில் எத்தனை பேர் இறந்தனர் என்று தெரியவில்லை என்றார்.

ஆனால் கடற்படையினர் கூறுகையில், புலிகளின் வயர்லெஸ் பேச்சுகளை இடைமறித்துக் கேட்டபோது இந்தத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய செழியன் என்ற கமாண்டர் பலியாகிவிட்டார் அல்லது பலத்தகாயமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது என்றனர்.

ஆனால், இந்த சண்டை நடந்தபோது செழியன் அந்த இடத்திலேயே இல்லை என புலிகள் கூறியுள்ளனர்.

விமானப் படை வீரர் பலி:

இந் நிலையில் இன்று காலை வவுனியாவில் கண்ணி வெடியில் சிக்கி இலங்கை விமானப் படை வீரர் ஒருவர்பலியானார்.

இன்னொரு வீரர் படுகாயமடைந்தார். இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்படுள்ளனர்.

புலிகள் எச்சரிக்கை:

இலங்கை ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை முழுவதும் போர் வெடிக்கும் என்று புலிகள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புலிகளிடம் இருந்து சம்பூர் பகுதியை பிடித்த இலங்கை ராணுவம் மேலும் சில பகுதிகளை பிடிக்க தொடர்ந்துதாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து புலிகளின் அரசியல் துறை செய்தி தொடர்பாளர் தமிழ்ச்செல்வன்கூறுகையில்,

இலங்கை ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கையை தொடர்ந்தால், எங்கள் மீதும் தமிழர்பகுதிகள் மீதும் தாக்குதல் நீடித்தால் புலிகளும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறி தற்காப்பு நடவடிக்கைகளில்ஈடுபடுவார்கள்.

இது இலங்கை முழுவதும் பெரிய அளவில் யுத்தத்துக்கு வழிவகுக்கும். ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தினால்தான் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சம்பூர் பகுதியை ராணுவம் பிடித்துள்ளது.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் இது. அதை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்என்றார்.

ராஜபக்ஷே ஆலோசனை:

இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்று விட்டுஇலங்கை திரும்பினார். உடனடியாக ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனைநடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+