சிக்கலில் பணிக்கர்-மிரட்டும் ஜெயமாலா
திருவனந்தபுரம்:
![]() |
ஐயப்பன் சிலையை தொட்டதாக பேக்ஸ் அனுப்புமாறு ஜெயமாலாவுக்கு யோசனை சொன்னதே உன்னி கிருஷ்ணபணிக்கரின் உதவியாளர் ரகுபதி தான் என்று தெரியவந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண் புகுந்துள்ளதாக உன்னி கிருஷ்ண பணிக்கர் அதிர்ச்சியான தகவலைசொன்ன அடுத்த நாள் நான் தான் அந்தப் பெண் என்று பேக்ஸ் அனுப்பி மேலும் அதிர்ச்சி அலைகளைபரப்பினார் கன்னட நடிகை ஜெயமாலா.
இது தொடர்பாக நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில், உன்னியும் ஜெயமலாவும் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
கோவிலின் பூசாரிகளான தந்திரிகளையும் கோவில் நிர்வாகமாந தேவசம் போர்டு நிர்வாகிகளையும் கலங்கடிக்கஇந்த சதியை உன்னிகிருஷ்ணன் தீட்ட, அதற்கு ஜெயமாலா உதவியிருக்கிறார் என்கிறது போலீஸ்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை முடித்து அறிக்கையை குற்றப்பிரிவு ஏடிஜிபியிடம் அளித்துள்ளனர்.
![]() |
அந்த அறிக்கையில், பணிக்கரின் உதவியாளர் ரகுபதிக்கு, ஜெயமாலா பிரச்சனையில் முக்கிய தொடர்புஇருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜூன் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை சபரிமலையில் உன்னிகிருஷ்ண பணிக்கரால் கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டபோது பணிக்கருடன் ரகுபதியும் இருந்துள்ளார்.
தேவ பிரசன்னம் தொடர்பான பட்டியல் தயார் செய்தது, பணிக்கர் கூறிய விவரங்களை டேப்பில் பதிவு செய்ததுஉள்ளிட் பல்வேறு பணிகளை இவர் செய்துள்ளார்.
அப்போது சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தேவசம் போர்டு அலுலகத்தில் இருந்து ஜெயமாலாவை தொடர்புகொண்டார் ரகுபதி.
சபரிமலை ஐய்யப்பன் சிலையை தொட்டதாக ஒரு பேக் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால், தேவசம் போர்டுக்கு பேக்ஸ் அனுப்புவதற்கு பதிலாக உன்னிகிருஷ்ண பணிக்கர் பெயரில் பேக்ஸ்அனுப்பி இருக்கிறார் ஜெயமாலா.
சபரிமலைக்குள் பெண் நுழைந்து விட்டார், அதனால் ஐயப்பன் கோபத்தில் இருக்கிறார் என்று தான் கூறியதைஉண்மை என்று காட்டவும் பொது மக்களுக்கு தன் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், அதன் மூலம் அதிகமானவருமானம் பார்க்கவும் இந்த வேலையைச் செய்துள்ளார் பணிக்கர்.
ஏற்கனவே ஜோதிடம் மூலம் ஜெயலமாலாவுக்கு பழக்கமான பணிக்கர், அவரிடம் இந்த பேக்ஸை அனுப்புமாறுகூறியுள்ளார்.இருவரும் சேர்ந்து நடத்திய இந்த நாடகத்தில் பணிக்கரின் உதவியாளர் ரகுபதிக்கு முக்கிய பங்கு இருந்ததும்போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதாரங்களை வெளியிடுவேன்:
இதற்கிடையே பெங்களூரில் நிருபர்களிடம் ஜெயமாலா கூறுயிைல், கேரள போலீசார் 200 பக்க அறிக்கைதயாரித்துள்ளனர். அதில் ஒரு நகல் தரும்படி நான் கேரள குற்றப் பிரிவு போலீசாருக்கு ஒரு பேக்ஸ் அனுப்பிஉள்ளேன். இதுவரை எனக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.
இன்னும் 2 நாளில் எனக்கு அறிக்கை நகல் தரப் பட வேண்டும். இல்லையெனில் ஐயப்பன் சிலையைதொட்டதற்கான ஆதாரங்களை நான் சனிக்கிழமை வெளியிடுவேன். இந்த ஆதாரங்களை நான் சபரிமலைஐயப்பன் கோவில் லட்சோப லட்ச பக்தர்களை சர்ச்சைக்குள் ஆழ்த்தவும், இரு மாநில அரசுக்கு இடையேபிரச்சனை ஏற்படவும் நான் காரணமாக இருக்கக் கூடாது என்பதற்காக தான் இதுவரை நான் இதைவெளியிடவில்லை.
ஆனால் நான் இப்போது மிகவும் நெடிக்கடியில் இருக்கிறேன். அதனால் தான் ஆதாரங்களை வெளியிட முடிவுசெய்துள்ளேன் என அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications