வேன்-லாரி மோதலில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் என்ற இடத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் உள்பட 7 பேர் பலியாயினர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ளது நஞ்சை இடையாறு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தராமசாமி, வடிவேல், பாலசுப்ரமணி, சுப்ரமணி, முத்துச்சாமி, மாதேஸ்வரன், சமையல் சண்முகம், பசுபதி,இன்னொரு சண்முகம் ஆகியோர் மாருதி வேனில், காஞ்சிபுரத்திற்குச் சென்றனர்.

மாதேஸ்வரன்தான் வேனை ஓட்டினார். காஞ்சிபுரத்தில் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் நேற்று இரவுஊருக்குக் கிளம்பினர். இன்று காலை பரமத்தி வேலூர் அருகே காரைக்கால் என்ற இடத்தில் வேன் வந்தபோது,எதிரே தவிட்டு மூட்டைகளுடன் மதுரையிலிருந்து நாமக்கல் வந்த லாரி வேகமாக மோதியது.

இதில் வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தில் ராமசாமி, வடிவேல், பாலசுப்ரமணி, சுப்ரமணி, முத்துச்சாமி,மாதேஸ்வரன், பசுபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

விபத்தில் பலியான பாலசுப்ரமணி, உள்ளாட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல்செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதேஸ்வரனுக்கு கல்யாணமாகி 15 நாட்கள்தான் ஆகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+