ஒரு நாள் கிரிக்கெட்: 7வது இடத்தில் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்தியா 7வது இடத்திற்குதள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தில்உள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான மாருதிசுசுகி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

டெஸ்ட் தர வரிசையில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்துமுதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2வது இடத்திலும்,இங்கிலாந்து 3வது இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில்பாகிஸ்தான் உள்ளது. இந்திய அணிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

இந்த அணிகளுக்கு அடுத்த இடங்களில் நியூசிலாந்து (6), தென்ஆப்பிரிக்கா (7), மேற்கு இந்திய தீவுகள் (8), வங்கதேசம் (9) ,ஜிம்பாப்வே (10) ஆகிய அணிகள் உள்ளன.

முகம்மது யூசுப் முதலிடம்:

பேட்டிங் வரிசையில், பாகிஸ்தானின் முகம்மது யூசுப் முதலிடத்தில்உள்ளார். இலங்கை கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே 2வதுஇடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 3வதுஇடத்திலும் உள்ளனர். இந்தியாவின் ராகுல் டிராவிட் (4), பாகிஸ்தானின் யூனிஸ் கான் (5),ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹூசே (6), இலங்கையின் குமார்சங்கக்காரா (7), கெவின் பீட்டர்சன் (8), மாத்யூ ஹைடன் (9),இன்சமாம் உல் ஹக் (10) ஆகியோர் உள்ளனர்.

முரளீதரன் முதலிடம்:

பந்து வீச்சாளர்கள் வரிசையில், முத்தையா முரளீதரன் தொடர்ந்துமுதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் கும்ப்ளே 2வது இடத்தைப்பெறுகிறார். தென்னாப்பிரிக்க வீரர் மக்கயா நிடினி (3), ஷான்வார்னே (4), பிரட் லீ (5), மாத்யூ ஹோக்கர்ட் (6), ஸ்டீவ் ஹார்மிசன்(7), பிளின்டாப் (8), மான்டி பனீசர் (9), ஹர்பஜன் சிங் (10)ஆகியோர் உள்ளனர்.

ஒரு நாள் தர வரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.அதற்கு அடுத்த இடங்களில் தென்னாப்பிரிக்கா (2), இலங்கை (3),மேற்கு இந்திய தீவுகள் (4), பாகிஸ்தான் (5), நியூசிலாந்து (6),இங்கிலாந்து (8), வங்கதேசம் (9), ஜிம்பாப்வே (10) ஆகியஅணிகள் உள்ளன.

பிரட் லீ முதலிடம்:

பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பிரட் லீமுதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஹர்பஜன் சிங் 4வதுஇடத்தையும், அஜீத் அகர்கர் 6வது இடத்தையும், இர்பான் பதான்8வது இடத்தையும், ஸ்ரீசந்த் 10வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

சனத் ஜெயசூர்யா முதலிடம்:

பேட்டிங் வரிசையில், சனத் ஜெயசூர்யா முதலிடத்தில் உள்ளார்.அதற்கு அடுத்த இடத்தில் உள்ளவர்கள்: மைக்கேல் ஹூசே (2),மகிளா ஜெயவர்த்தனே (3), ராம் நரேஷ் சர்வான் (4), யூனிஸ் கான்(5), உபுல் தரங்கா (6), இயான் பெல் (7), யுவராஜ் சிங் (8),முகம்மது யூசுப் (9), குமார் சங்கக்காரா (10) ஆகியோர் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+