7/11குண்டுவெடிப்பு: ஐ.எஸ்.ஐ தொடர்பு அம்பலம்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

கடந்த ஜூலை 11ம் தேதி மும்பை ரயில்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உளவுநிறுவனமான ஐ.எஸ்.ஐ.தான் நேரடி காரணம் என மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.என்.ராய்தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி மும்பை நகர புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்புசம்பவம் நடந்தது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 186 பேர் பலியானார்கள். 700க்கும் மேற்பட்டோர்காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து மும்பை காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார்தீவிரமாக விசாரித்து வந்தனர். தற்போது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை தீவிரவாத தடுப்புப் பிரிவுபோலீஸார் முடித்துள்ளனர்.

விசாரணையில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனம் தான் இந்த சதித் திட்டத்தை தீட்டிக் கொடுத்தது என்றுதெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையர் ஏ.என்.ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,மொத்தம் 12 பேர் இந்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள்எங்களுக்குக் கிடைத்துள்ளன.

12 பேருக்கும் பாகிஸ்தானில் உள்ள பகவல்பூரில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தலைவர் போலபைசல் ஷேக் என்பவர் செயல்பட்டுள்ளார். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து ஆர்.டி.எக்ஸ் மற்றும் நைட்ரேட்வெடிபொருளை மும்பைக்கு எடுத்து வந்தார்.

மொத்தம் 15 முதல் 20 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளனர். இவற்றை எட்டு பிரஷர் குக்கர்களில்வைத்து, அவற்றை ரயில்களில் வைத்துள்ளனர். பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் தான் இந்த சதித் திட்டத்தைதீட்டிக் கொடுத்துள்ளது. இதற்கு வலுவான ஆதாரங்களை நாங்கள் சேகரித்துள்ளோம்.

லஷ்கர் இ தொய்பா மற்றும் சிமி ஆகிய அமைப்புகள் இந்த தாக்குதலை செயல்படுத்தியுள்ளன.

சதித் திட்டம் கடந்த மே மாதமே இறுதி செயய்யப்பட்டு விட்டது. அதன் பின்னர் திட்டத்தை நிறைவேற்றிய 12பேரும் பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு வந்துள்ளனர். பந்த்ரா, மாலத், பொரிவிலி ஆகிய இடங்களில் வீடுகளைவாடகைக்கு எடுத்து தங்கினர்.

செம்பூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து குண்டுகளை இணைத்து பிரஷர் குக்கர்களில் பொருத்திய பைசல் ஷேக்,அதை மற்றவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பின்னர் குண்டுகளுடன் அவர்கள் ரயில் நிலையங்களுக்குவிரைந்துள்ளனர்.

ஜோகேஸ்வரி நிலையத்தில் பைசல் குண்டை வைத்துள்ளார். நவேத் என்பவர் கர் ரயில் நிலையத்திலும், கமலுதீன்அகமது அன்சாரி மாதுங்காவிலும், சித்திக் மீரா சாலை நிலையத்திலும் குண்டுகளை வைத்துள்ளனர். அனைத்துமேடைம் பாம் ரக குண்டுகள் ஆகும் என்றார் ராய்.

குண்டுவெடிப்புக்கு முன்பும், பின்பும் தீவிரவாதிகள் தொலைபேசி மூலம் பேசிக் கொண்ட விவரங்களைசேகரித்து அதன் மூலம் இந்தத் சதித் திட்டம் குறித்த விவரங்களை கண்டுபிடிக்க முடிந்ததாக ராய் தெரிவித்தார்.

பேட்டியின் போது, மகாராஷ்டிர மாநில டிஜிபி பஸ்ரீச்சா, தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ரகுவன்ஷிஆகியோரும் உடன் இருந்தனர்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான சதித் திட்டம் அம்பலமாகியிருப்பது குறித்து மகாராஷ்டிர மாநில துணைமுதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் கூறுகையில், நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான விசாரணைமுடிவுக்கு வந்துள்ளது.

சதித் திட்டத்த்தை தீட்டி, நடைமுறைப்படுத்திய முக்கிய நபர்கள் தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாகஉள்ளனர். விரைவில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை விசாரிப்பதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். 2 ஆண்டுகளில்இந்த விசாரணை முடிவடையும் என்றார் பாட்டீல்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணைமுடிவடைந்துள்ளதும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு இந்த சம்பவத்தில் முக்கிய தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+