1,30,962 பதவிகளுக்கு 4 லட்சம் பேர் போட்டி
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இறுதிப்போட்டியில் உள்ளனர். சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 155இடங்களுக்கு 1326 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள், 50 மூன்றாம் நிலை நகராட்சிகள்,561 பேரூராட்சிகள், 12,618 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 29 மாவட்டபஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்காக வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில்தேர்தல் நடைபெறவுள்ளது.மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 302 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்கள், 13,660நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்கள் என மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 962பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த செப்டம்பர் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல்நிறைவின் போது மொத்தம் 4 லட்சத்து 85 ஆயிரத்து 159 மனுக்கள்தாக்கலாகியிருந்தன. மனுக்கள் பரிசீலனையின்போது பல்வேறு காரணங்களால் 8,374மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்றுடன் மனுக்களை வாபஸ் வாங்க கடைசிநாளாகும்.
கால அவகாச முடிவில் 4 லட்சத்திற்கும் சற்றே அதிகமானோர் போட்டியில் உள்ளனர்.தமிழகத்திலேயே மிகப் பெரிய மாநகராட்சியான சென்னையில் உள்ள 155 கவுன்சிலர்பதவிகளுக்கு 1326 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் 4 கோடியே 64 லட்சத்து 19 ஆயிரத்து 395 வாக்காளர்கள் ஓட்டுப்போடவுள்ளனர். இவர்களுக்காக மொத்தம் 80,458 வாக்குச் சாவடிகள்அமைக்கப்படவுள்ளன. வாக்குச் சீட்டு அடிப்படையில் நடைபெறவுள்ள இந்ததேர்தலில் 2 லட்சத்து 42 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
13ம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலில் சென்னை, கோவை, சேலம், நெல்லைமாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
15ம் தேதி நடைபெறும் 2வது கட்டத் தேர்தலில் மதுரை, திருச்சி மாநகராட்சிகள், 57நகராட்சிகள், 27 மூன்றாம் நிலை நகராட்சிகள், 280 பேரூராட்சிகள், 190 ஊராட்சிஒன்றியங்களில் தேர்தல் நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைவாக்குப் பதிவு நடைபெறும்.
18ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டகவுன்சிலர்களின் முதல் கூட்டம் 25ம் தேதி நடைபெறும். அதைத் தொடர்ந்து புதியமேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள்உள்ளிட்ட தலைவர்களை தேர்ந்தெடுக்க 28ம் தேதி மறைமுகத் தேர்தல்நடைபெறுகிறது. கவுன்சிலர்கள் கூடி இவர்களைத் தேர்வு செய்வார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications