காந்தியை அவமதித்த இடத்தைப் பார்த்த மன்மோகன்
ஜோஹன்னஸ்பர்க்:
தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி தங்கியிருந்தபோது, அவரை ரயிலிலிருந்து கீழே தள்ளி அவமதித்தஇடத்தை பிரதமர் மன்மோகன் சிங் பார்வையிட்டு உணர்ச்சிவசப்பட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.அவருடன் மனைவி குருசரண் கெளர், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்நாராயணன் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.தென்னாப்பிரிக்காவில் தான் மகாத்மா காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார். கடந்த 1906ம்ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை மன்மோகன் சிங் தொடங்கிவைக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு வந்து சேர்ந்த மன்மோகன் சிங் தனது முதல் விஜயமாக, சத்தியாகிரகப்போராட்டம் தோன்றக் காரணமான, மகாத்மா காந்தியை ரயிலிலிருந்து கீழே தள்ளி விடப்பட்ட பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கு சென்றார்.
இந்த ரயில் நிலையத்தில் தான் வெள்ளையர்களுக்கான பெட்டியில் பயணம் செய்ததற்காக காந்தியைவெள்ளையர்கள் கீழே தள்ளி விட்டனர். இந்த இடத்தைப் பார்வையிட்ட மன்மோகன் சிங் உணர்ச்சி வசப்பட்டநிலையில் காணப்பட்டார்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்தில் அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
பின்னர் காந்தியடிகள் பயணம் செய்த அதே ரயிலில் பென்ரிச் முதல் பீட்டர்மாரிட்ஸ் பர்க் வரை பயணம் செய்தார்மன்மோகன் சிங்.
தனது தென்னாப்பிரிக்க பயணத்தின்போது காந்தியடிகள் அடைக்கப்பட்டிருந்த சிறையையும் மன்மோகன் சிங்பார்வையிடுகிறார். காந்தி குறித்த புகைப்படக் கண்காட்சியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
பின்னர் தென்னாப்பிரிக்க அதிபர் மெபோகியையும் சந்திக்கிறார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே 7ஒப்பந்தங்கள் இந்த பயணத்தின்போது கையெழுத்தாகின்றன. முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவையும்அவர் சந்திக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications