அப்சலை தூக்கிலிட ஏற்பாடுகள் தொடங்கின
டெல்லி:
![]() |
நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளபேராசிரியர் முகம்மது அப்சல் குரு, வரும் 20ம் தேதி தூக்கிலிடப்படுகிறார். அவரைத்தூக்கில் போடுவதற்காக மீரட்டிலிருந்து மம்மு என்பவர் திகார் சிறைக்குவரவழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள்தாக்குதல் நடத்தினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கல்லூரி பேராசிரியரானஅப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தண்டனையைஉச்சநீதிமன்றம் இறுதி செய்துள்ளது.
இதையடுத்து அப்சலை வரும் 20ம் தேதி திகார் சிறையில் தூக்கிலிட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்தர் கெளர் மரணதண்டனையை நிறைவேற்றும் வாரண்ட்டைப் பிறப்பித்துள்ளார். 20ம் தேதி காலை 6மணிக்கு அப்சல் தூக்கிலிடப்படவுள்ளார்.
அப்சலைத் தூக்கிலிடுவதற்காக உ.பி. மாநிலம் மீரட்டிலிருந்து மம்மு என்பவர்வரவழக்ைகப்பட்டுள்ளார். இவரது தந்தை முகலு என்பவரும் பல கைதிகளைதூக்கிலிட்ட அனுபவம் பெற்றவர். தந்தையின் வழியில் மம்முவும் தற்போதுகைதிகளை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.திகார் சிறையின் ஜெயிலர் பி.எஸ்.ஜரியால் முன்னிலையில் அப்சல்தூக்கிலிடப்படுவார். தற்போது சிறை எண் 1ல் ஜெயிலராக உள்ளார் ஜரியால்.விரைவில் அப்சல் அடைக்கப்பட்டுள்ள சிறை எண் 3க்கு அவர் மாற்றப்படவுள்ளார்.
கடந்த 1981ம் ஆண்டு முதல் ஜரியால் திகார் சிறையில் ஜெயிலராக பணியாற்றிவருகிறார். அவரது பதவிக்காலத்தில் 7 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பிரபலமானதாதாக்களான பில்லா மற்றும் ரங்கா ஆகிய இருவரும் 1982ம் ஆண்டு ஜரியால்முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
இதேபோல 1984ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர்களில்ஒருவரான மக்பூல் என்பவரும் ஜரியால் முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
1989ம் ஆண்டு இந்திரா காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டசத்வந்த் சிங்கும், கேஹர் சிங்கும், ஜரியால் முன்னிலையில்தான் தூக்கிலிடப்பட்டனர்.
இதற்கிடையே, அப்சல் சிறையில் மிகவும் அமைதியாகவும், ஆழ்ந்த சிந்தனையிலும்இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட தகவல்வெளியானது முதல் அவர் தினசரி ஐந்து வேளை தொழுகை நடத்தி வருகிறார்.
அப்சலின் சகோதரர் இஜாஸ் அகமது வெள்ளிக்கிழமை சிறையில் பார்த்துப் பேசினார்.பகல் முழுவதும் இறை சிந்தனைகளில் இருக்கும் அப்சல், இரவில் நிம்மதியுடன்தூங்குவதாக இஜாஸ் தெரிவித்தார். விரைவில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைசந்தித்து, அப்சலுக்கு கருணை காட்டுமாறு கோரப் போவதாக இஜாஸ்தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணமாக அப்சலை தற்போது சிறை எண் 4க்கு மாற்றியுள்ளனர். மேலும்,அப்சல் தற்கொலை செய்து கொண்டு விடக் கூடாது என்பதற்காக மிகவும்உன்னிப்பாக அவர் இருக்கும் அறை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அப்சல் அணிந்துள்ள துணியினால் ஆன பைஜாமாவைக் மாற்றி விட்டுஎலாஸ்ட்டிக்கினால் ஆன பைஜாமாவை அதிகாரிகள் கொடுத்துள்ளனர்.
விமானங்களை கடத்த திட்டம்:
இதற்கிடையே, அப்சல் தூக்கிலிடுவதைத் தடுக்க இந்தியாவின் முக்கிய நகரங்களில்விமானங்களைக் கடத்தி வெடிக்க வைக்க நான்கு தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்துஇந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நான்கு பேரும், நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளதாகவும்,விமானங்களைக் கடத்தி அவற்றை வெடிக்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மத்தியஉளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திகார் சிறையின் மீதோ அல்லது தலைநகர்டெல்லியிலோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications