இன்று மகாத்மாவின் பிறந்த நாள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மகாத்மா காந்தியின் 137வது பிறந்த தினத்தையொட்டி நாடு முழுவதும் அண்ணலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின் சாமாதியில் ஜனாதிபதி கலாம் இன்று காலை மலரஞ்சலி செலுத்தினார்.இதையொட்டி நடந்த அனைத்து மத பிரார்த்தனையிலும் கலாம் பங்கேற்றார்.
அதே போல துணை ஜனாதிபதி ஷெகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் ஆகியோரும்மகாத்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
அதே போல இன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினம் என்பதால் அவரதுநினைவிடமான விஜய் காட்டிலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications