மதுரையில் அதிமுகவினர் மீது பயங்கர தாக்குதல்
மதுரை:
மதுரை மத்திய தொகுதியில் நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கும்பல்புகுந்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம்செய்யவுள்ளார்.ஜெயலலிதாவின் பிரசாரம் தொடர்பாக விவாதிக்க தானப்ப முதலி தெருவில் உள்ளகல்யாண மண்டபத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம்தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு கும்பல் கார்களில் அங்கு வந்தது.
கல்யாண மண்டபத்தின் உள்ளே சோடா பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நுழைவாயில் கதவை உடைத்து உள்ளே புகுந்தஅக்கும்பல், உள்ளே இருந்தவர்களைத் தாக்கத் தொடங்கியது. இதனால் பயந்து போனபெண்கள் அலறி அடித்து ஓடினர்.
இந்த சம்பவம் நடந்தபோது அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார்கும்பலைத் தடுக்க முயலவில்லை என்று அதிமுகவினர் குற்றம் சாட்டினர். பின்னர்அக்கும்பல் அங்கிருந்து சென்றது. அதன் பிறகு கூட்டம் தொடர்ந்து நடந்தது.
தாக்குதல் நடத்தியது திமுகவினர் என அதிமுகவினர் கூறுகின்றனர். ஆனால்அதிமுகவின் இன்னொரு கோஷ்டி தான் தாக்குதல் நடத்தியதாக திமுக தரப்புகூறுகிறது.












Click it and Unblock the Notifications