30 கோடியை எட்டும் அமெரிக்க மக்கள் தொகை
வாஷிங்டன்:
அமெரிக்க மக்கள் தொகை இந்த மாத இறுதிக்குள் 30 கோடியை எட்டவுள்ளது.
தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்து வருகிறது.அமெரிக்க மக்கள் தொகை பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்,
அக்டோபர் மாத மத்தியில் அமெரிக்க மக்கள் தொகை 30 கோடியை தொட்டு விடும். 39 ஆண்டுகளுக்கு முன்புமக்கள் தொகை 20 கோடியை தொட்டது. 91 ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடியை தொட்டது.
இந்த மக்கள் தொகை உயர்வு மூலம் உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள 3வது நாடு என்ற பெருமையும்அமெரிக்காவுக்குக் கிடைக்கிறது. தற்போது முதலிடத்தில் சீனாவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில்தான் மக்கள் தொகை பெருக்கும் அதிகம் உள்ளது.2004-2005ல் அமெரிக்க மக்கள் தொகை 10.7 லட்சம் அதிகரித்துள்ளது.
ஆய்வறிக்கையை வெளியிட்ட விக்டோரியா மார்க்கம் கூறுகையில், தொழில்ரீதியாக வளர்ச்சி அடைந்தநாடுகளிலேயே அமெரிக்காவில் தான் மக்கள் தொகை சீரான விகிதத்தில் பெருகி வருகிறது.
மக்கள் தொகை பெருகி வருவதால் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் சீர்கேடும் பெருகி வருகிறது. உலகிலேயே தனிநபர் சுற்றுச்சூழல் பாதிப்பு அமெரிக்காவில்தான் அதிகம் உள்ளது.
உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதமே என்றாலும் உலக மின்சாரஉற்பத்தியில் 25 சதவீதத்தை அமெரிக்காதான் பயன்படுத்தி வருகிறது.
கடந்த 1967ம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை 20 கோடியை எட்டியபோது, பிரபல எழுத்தாளர் பால் எர்லிச்ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதற்கு மக்கள் தொகை குண்டு The Population Bomb என்றேபெயரிட்டார். மக்கள் தொகை பெருக்கத்தால் அமெரிக்காவில் பட்டினிச் சாவுகள் ஏற்படும் என அவர்எச்சரித்திருந்தார்.
ஆனால் அதுபோல எதுவும் நடக்கவில்லை. தற்போது 30 கோடி மக்கள் தொகையை அமெரிக்கா எட்டவுள்ளநிலையில் அதுபோன்ற எந்த ஆபத்தும் ஏற்படாது என்று கூறியுள்ளார் மார்க்கம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications