புதுவை முதல்வர் மீது ராமதாஸ் பாய்ச்சல்
புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவனை விவகாரத்தில் புதுவை காங்கிரஸ் அரசிடம் கருத்து கேட்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ்காட்டமாக கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தமருத்துவமனைக்கு தன்னாட்சி அந்தஸ்து தருவது தொடர்பாக மத்திய அமைச்சரவைமுடிவு எடுத்துள்ளது.
இந்த முடிவு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டுவிவாதிக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்பதுலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர்சட்டமாகும். இதில் எந்த இடத்திலும் புதுவை காங்கிரஸ் அரசின் பங்கு வரவில்லை.
எனவே புதுவை அரசிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை, தேவையும்இல்லை.
ஜிப்மர் பிரச்சினை பெரிதாக புதுவை அரசும் ஒரு காரணம். இந்த விவகாரத்தில்புதுவை முதல்வர் ரங்கசாமி நிர்வாகரீதியில் சரியாக செயல்படவில்லை. புதுவையில்உள்ள சில தனியார் மருத்துவமனைகளின் தூ ண்டுதலால்தான் இந்த ஸ்டிரைக்கேநடந்தது.
மேலும், ஊழியர்கள் போராட்டத்தின்போது சரியான முறையில் போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்படவில்லை. இந்தப் பிரச்சினையை புதுவை அரசும், காவல்துறையும்முறையாக அணுகியிருந்தால் போராட்டமே நடந்திருக்காது.
ஜிப்மர் விவகாரத்தில் புதுவை முதல்வரின் செயல்பாடு குறித்து இதுவரை சோனியாகாந்தியிடம் கூறவில்லை. நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.
புதுவை அரசு திமுக ஆதரவோடு இயங்கி வருகிறது. நாங்களும் ஆதரவுதெரிவிக்கிறோம். எனவே முதல்வரை மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாங்கள்முடிவெடுக்க முடியாது. காங்கிரஸும், திமுகவும்தான் இதில் முடிவெடுக்க முடியும்என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications