காங். வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர்படுகாயமடைந்தார்.ராமநாதபுரம் மூலக்கொத்தளம் காலனியை சேர்ந்த சாத்தையா (48). முன்னாள் ராணுவ வீரரான இவர் காங்கிரஸ்கட்சி சார்பில் நகராட்சி தேர்தலில் 33வது வார்டுக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் குமார்,சுயேச்சைகளாக காசி சங்கர், முருகேசன், லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந் நிலையில் தனது பிரசாரத்தை முடித்து விட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த சாத்தையாவை அடையாளம் தெரியாத 3 பேர் அரிவாளால் வெட்டியதோடு, கம்பி மற்றும்உருட்டுக் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கினர்.
இதில் தலையில் வெட்டுக் காயத்துடன் சாத்தையா மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடியது. மயங்கி கிடந்த சாத்தையாவை ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications