மதிமுக நாஞ்சில் சம்பத் திடீர் கைது
சென்னை:
![]() |
மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்றிரவு திடீரென கைது செய்யப்பட்டார்.
வைகோவைப் போல படு காரசாரமாக பேசக் கூடிய சம்பத் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகதலைமையை மிகக் கடுமையாக சாடி பிரசாரம் செய்தார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பஅரசியல் குறித்தும் அவர் தாக்கி வந்தார்.
அதிமுக-மதிமுக கூட்டணி ஏற்படவும் முக்கிய காரணமாக இருந்தார். தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்துகருணாநிதியையும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்தார்.
இந் நிலையில் சமீபத்தில் மதிமுகவில் இருந்து விலகினார் அதன்முன்னணித் தலைவர்களில் ஒருவரான விஜயாதாயன்பன். இவர் ஏராளமான மதிமுகவினரோடு திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து பொதுக் கூட்ட மேடைகளில் விஜயாவையும் நாஞ்சில் சம்பத் தரக் குறைவாக பேசி வந்தார்.இந் நிலையில் விஜயா தாயன்பன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கடந்த 28ம் தேதி எம்.ஜி.ஆர். நகரில் நடந்தமதிமுக பொதுக் கூட்டத்தில் என்னைப் பற்றி மிக அவதூறாகப் பேசினார். பெண் என்றும் பாராமல் என்னைமிகவும் கேவலமாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து நேற்று மாலை வில்லிவாக்கத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் சம்பத் பேசினார். அந்தஇடத்திற்குச் சென்ற பெரும் படையுடன் சென்ற போலீஸார், கூட்டம் முடியும் வரை காத்திருந்தனர்.
பொதுக் கூட்டம் முடிந்து இரவில் சம்பத் காரில் வீடு திரும்பினார். இரவு 11 மணியளவில் சம்பத்தை போலீஸார்வழிமறித்துக் கைது செய்தனர். சம்பத் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர் சம்பத்தை, சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
சம்பத்தை 18ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவரைசென்னை மத்திய சிறைக்கு கொண்டு சென்று போலீஸார் அடைத்தனர்.
மதிமுக கண்டனம்:
உள்ளாட்சித் தேர்தலில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்வதைத் தடுக்கும் வகையிலேயே, அரசியல் பழி வாங்கும்நோக்குடன் சம்பத்தை போலீஸார் கைது செய்துள்ளதாக மதிமுக கூறியுள்ளது.
திமுக தலைமையின் தூண்டுதலே இதற்குக் காரணம் என்றும் மதிமுக கூறியுள்ளது.
நீண்ட காலமாக திமுகவில் இருந்த விஜயா தாயன்பன், வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபோதுதானும் வெளியேறி மதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் அமைச்சர் ஆர்க்காடு வீராசாமியை எதிர்த்துப்போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications