கோடிகளில் புரளும் இந்திய பிரபலங்கள்!
சென்னை:
![]() |
சாதாரண இந்தியர்கள், மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கவே மார் வலிக்க மாங்குமாங்கென்று உழைக்க வேண்டியுள்ளது.
ஆனால் இந்திய மக்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள், திரையுலகநட்சத்திரங்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் சம்பாதிக்கும் பணம் எவ்வளவுதெரியுமா? மூச்சை இறுகப் பிடித்துக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.
சென்னைக்கும், இந்தியாவுக்கும் உலக அரங்கில் பெரும் பெருமையை ஏற்படுத்திக்கொடுத்துள்ள அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகபதவியேற்கவுள்ள இந்திரா நூயி பெறப் போகும் ஆண்டு சம்பளம் எவ்வளவுதெரியுமா? ரூ. 153 கோடியாம்.
பெப்சி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தபோது அவரது ஆண்டுசம்பளம் வெறும் ரூ. 23 கோடிதான். புதிய பொறுப்பில் அவர் நிமிடத்திற்கு ரூ. 2,911சம்பாதிப்பார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், ஒரு டெஸ்ட் போட்டியில்விளையாட ரூ. 2.35 லட்சமும், ஒரு நாள் போட்டியில் ஆட ரூ. 2.5 லட்சமும்வாங்குகிறார். 3 ஆண்டுகளுக்கு காண்டிராக்ட் முறையில் விளம்பரத்தில் நடிப்பதன்மூலம் ரூ. 180 கோடி சம்பாதிக்கிறார். உலகிலேயே அதிக அளவில் சம்பாதிக்கும் ஒரேகிரிக்கெட் வீரர் சச்சின்தான். இவரது சராசரி ஆண்டு வருமானம் ரூ. 61.15 கோடி.இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் லேசுப்பட்டவர் இல்லை. சினிமாவை விடவிளம்பரங்களில்தான் பணத்தை அள்ளுகிறார் அமிதாப். சினிமாவில் நடித்தாலும்இல்லாவிட்டாலும் இவரது ஆண்டு வருமானம் ரூ. 19 கோடி.
உலகின் 56வது பணக்காரர் என்ற பெருமையைப் பெற்ற ரிலையன்ஸ் நிறுவன அதிபர்முகேஷ் அம்பானி ஆண்டுக்கு ரூ. 21.72 கோடியை சம்பளமாக மட்டும் அள்ளுகிறார்.அவரது மற்ற வருமானம் (நிறுவனத்தின் லாபம் உள்ளிட்டவை) இதில்சேர்க்கப்படவில்லை.
இன்றைய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஆண்டுக்கு ரூ. 13 கோடி வரைவிளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறார். இது தவிர சினிமா சம்பாத்தியம்.
ஹீரோ ஹோண்டா குழும நிறுவனங்களின் தலைவரான பிரிஜ்லால் முன்ஜால்ஆண்டுக்கு ரூ. 13.4 கோடி சம்பாதிக்கிறார்.
இது வடக்கத்தி கணக்கு. தென்னிந்தியாவை எடுத்துக் கொண்டால் சூப்பர் ஸ்டார்ரஜினியின் ஒரு பட வருவாய் கணக்கே ரூ. 20 கோடிக்கு மேல் என்கிறார்கள்.சந்திரமுகி மூலம் ரஜினிக்கு ரூ. 25 கோடி வரை கிடைத்தது என்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications