திமுக ஆட்சியை காங் கலைக்கும்-எஸ்எஸ்.சந்திரன்
மதுரை:
திமுக அரசை காங்கிரஸ் கட்சி கலைத்து விட திட்டமிட்டிருப்பதாக அதிமுக எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன்கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்துஎஸ்.எஸ்.சந்திரன் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,மாட்டை கட்டுப்படுத்த மூக்கணாங்கயிறு அவசியம். அதுபோலத்தான், திமுக ஆட்சியின் மூக்காணங் கயிறாகராஜன் செல்லப்பா செயல்படுவார்.
ஜெயலலிதா மக்களுக்காக நிறைய செய்துள்ளார். அவர்களது குழந்தைகளுக்கு நிறைய நல்லது செய்துள்ளார்.ஜாதி, மத பேதம் பார்க்காமல் உதவியுள்ளார். கருணாநிதி மாதிரி பொய்யான, போலி வாக்குறுதிகளைக்கூறாதவர்.
நான் கருணாநிதியுடன் 35 ஆண்டுகள் இருந்தேன். அங்கு நொந்து நூலாகிதான் இங்கு வந்தேன்.
ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்தார் கருணாநிதி. இலவச டிவி தரப் போகிறேன் என்றார். ஆனால் 36,000பேருக்குத்தான் கொடுத்தார். அதேபோல 2 ஏக்கர் நிலத்தையும் முழுசாக தரவில்லை.
அவர் எல்லோருக்கும் இலவசமாக கொடுத்தது சிக்குன்குனியா நோயைத்தான்.
திமுக அரசு ஒரு மைனாரிட்டி அரசு. காங்கிரஸ் கட்சியை நம்பியிருக்கும் அரசு. ஆனால் காங்கிரஸை நம்பக்கூடாது. அவர்கள் பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்து உள்ளே தள்ளியவர்கள்.
மூப்பனாருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தது. அதைக் கெடுத்தவர் யார்? கருணாநிதிதான் கெடுத்தார்.
இப்போது கூட ஆட்சியில் பங்கு கேட்டு வருகிறது காங்கிரஸ். கொடுக்க மறுக்கிறது திமுக. இப்படியே போனால்திமுக ஆட்சியையே கலைத்து விட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த ஆட்சி நீடிக்காது என்றார்எஸ்.எஸ்.சந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications