பணம் தீபாவளிக்கு, ஓட்டு தேமுதிகவுக்கு!
கோவை:
திமுக, அதிமுகவினர் பணம் கொடுத்தால் அதை தீபாவளி செலவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டைமட்டும் மறக்காமல் தேமுதிகவுக்கு போட்டு விடுங்கள் என்று கோவையில் கலக்கலாக தேர்தல் பிரசாரம் செய்தார்தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்.
கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் தீவிர பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில், எனது கூட்டணி மக்களுடன் தான். தங்களுக்குத் தாங்களே நூற்றுக்கு நூறு எனமார்க் போட்டுக் கொண்டு தங்களது குடும்ப டிவியில் விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர்.காலையில் கொசு கடித்தால் காலரா, மாலையில் கடித்தால் மலேரியா, இரவில் கடித்தால் யானைக்கால் வியாதி,இடைவேளையில் கடித்தால் சிக்குன் குனியா. இப்படி இருக்கிறது நமது மாநிலத்தின் சுகாதாரம்.
கடந்த ஆட்சிகளில் கொசு ஒழிப்புக்காக மருந்தே அடிக்கவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால்அவர்கள் அடித்த கொசு மருந்தை, உணவு என்று கொசு நினைத்து விட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.
தைரியம் இருந்தால் கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அதிமுகவும், திமுகவும் தங்களது சாதனைகளைச் சொல்லி,உள்ளாட்சித் தேர்தலில் தனியாக வந்து போட்டியிடட்டும், பார்க்கலாம். ஏதாவது நல்லது செய்திருந்தால் தானேஅதை சொல்லி ஓட்டு கேட்க முடியும்.
ஆனால் எனக்கு தன்மானம் இருக்கிறது. எனவே தான் யாருடனும் கூட்டணி வைக்காமல் மக்களுடன் மட்டும்கூட்டணி வைத்து போட்டியில் நிற்கிறேன்.
திமுக, அதிமுகவினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், தீபாவளி செலவுக்கு ஆகும். அப்படியாவது அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களுக்குப்போகட்டும். ஆனால் ஓட்டை மட்டும் தேமுதிகவுக்கு போட்டு விடுங்கள்.
மாணவர்களே, மாணவிகளே, உங்களுடைய நண்பர்களுக்கெல்லாம் உங்கள் சின்னம் தீபம் என்று கூறிசெல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்புங்க என்றார்.
முன்னதாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் விஜய்காந்த் பிரச்சாரம் செய்கையில்,
50 ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த கட்சி என்று திமுகவினர் கூறுகின்றனர். அவர்களுக்கு கொள்ளை அடிப்பதுதான் வேலை. எங்களிடம் ஒருமுறை ஆட்சியை ஒப்படையுங்கள். சேலத்தை நான் மாற்றி காட்டுகிறேன்.
மேட்டூர் அணை எங்கள் ஆட்சியில் தான் மழை வந்து நிரம்பியது என்று திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்பெருமை அடித்து கொள்கின்றன. ஏன், ராக்கெட் லாஞ்சர் எங்கள் ஆட்சியில் தான் கடத்தப்பட்டது என்று இருகட்சிகளும் சொல்லிக் கொள்ள வேண்டியது தானே?
திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று அன்றே எம்ஜிஆர் கூறினார். அதுதான் தற்போது நடக்கிறது.விஜயகாந்தை முடக்க தேர்தலை குறுகிய காலத்தில் அறிவித்தனர். முரசு சின்னத்தை முடக்கினர். இருப்பினும்,தேர்தல் கமிஷன் அளித்த சின்னத்தில் தேமுதிக போட்டியிடுகிறது.
அதேபோல் திமுக உதயசூரியன் சின்னத்தை விடுத்து, போட்டியிட தயாரா என்றார் விஜய்காந்த்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications