சதா, ஷேபனா, ஜெயம் ரவிக்கு சிக்குன் குனியா
நடிகைகள் சதா, ஷேபனா, நடிகர் ஜெயம் ரவி ஆகியோருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் தாக்கியுள்ளது.
இப்போது ஜூலைக் காற்றில் என்ற படத்தில் நடித்து வரும் சதாவை சிக்குன் குனியா தாக்கி விட்டது. இதனால்உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அதே போல தனது அத்தை பத்மினியை இழந்து வாடி வரும் ஷேபனாவுக்கும் சிக்குன் குனியா தாக்குல்ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் திருவனந்தபுரத்தில் தான் ஒப்புக் கொண்ட ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியில் ஷேபனாஆடச் சென்றார்.
மேடை ஏறிய அவருக்கு உடல் வலியும் சோர்வும் ஏற்பட்டதால் 2 மணி நேரம் ஆட இருந்ததை அரை மணிநேரமாகக் குறைத்துக் கொண்டு பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டபடி கீழே இறங்கிவிட்டார் ஷோபனா.அதே போல நடிகர் ஜெயம் ரவியும் சிக்குன் குனியாவால் தாக்கப்பட்டுள்ளதால் அவர் நடித்து வரும் தீபாவளிஎன்ற படத்தின் சூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
சமீபத்தில் நடிகர் விக்ரக்கும் சிக்குன் குனியா வந்து 10 நாட்கள் அவஸ்தைப்பட்டார். இதனால் பீமா பட ஷூட்டிங்நிறுத்தப்பட்டது. பின்னர் உடல் நலம் தேறிய பின்னர் படப்பிடிப்பை தொடங்க ஆயத்தமானார்கள். ஆனால்பிரகாஷ் ராஜ் வேறு படத்திற்குப் போய் விட்டதால், படப்பிடிப்பை தொடங்காமல் உள்ளனர்.












Click it and Unblock the Notifications