நோட்டு நோக்கு, ஓட்டு நேக்கு-விஜயகாந்த்
மதுரை:
பொய் சொல்வது, பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று முதல்வர் கருணாநிதிக்குதேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
நெல்லையில் பேட்டி அளித்த முதல்வர் கருணாநிதி, முரசு சின்னத்தை திமுகதான் முடக்கியது என்று விஜயகாந்த்கூறுகிறார். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று கூறியிருந்தார்.இதற்கு மதுரை மத்திய தொகுதி சட்டசபை இடைத் தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் பதிலளித்தார்.தேமுதிக வேட்பாளர் பன்னீர் செல்வத்தை ஆதரித்து விஜயகாந்த் பேசுகையில், நான் மதுரையில் பிறந்தேன்,இங்கேதான் வளர்ந்தேன். எனது கட்சியையும் இங்கேதான் தொடங்கினேன்.
இப்போது அதே மதுரையில் உங்கள் முன் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். பொய் சொன்ன வாய்க்கு போஜனம்கிடைக்காது என்கிறார் கலைஞர். யார் பொய் சொல்வது? பொய் சொல்லிக் கொண்டிருப்பது யார் என்பதைமக்கள் அறிவார்கள்.
நீங்கள் பொய் சொல்லவில்லை என்றால் எம்ஜிஆர் போல தொடர்ந்து 13 ஆண்டுகள் நீங்களும் முதல்வராகஇருந்திருக்க வேண்டுமல்லவா? கருணாநிதி என்ன திட்டம் தீட்டினாலும் அவருக்கு சாதகமாகத்தான் செய்வார்.
ஏழைகளுக்கு இலவச டிவி தருகிறார். மின்சாரம் இலவசமாக தருகிறார். ஏன் கேபிள் இணைப்பையும்இலவசமாகத் தர வேண்டியதுதானே? வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை தரலாம் அல்லவா,ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.
மக்களுக்கு சேவை செய்ததாக கூறும் திமுகவும், அதிமுகவும் தங்களது சின்னத்தை விட்டு விட்டு சுயேச்சையாகநின்று காட்ட வேண்டியதுதானே, அது என்ன எங்களது சின்னத்தை மட்டும் முடக்கத் துடிக்கிறீர்கள்?
காசு கொடுத்து இப்போது ஓட்டு கேட்கிறார்கள். அது நாகரீகமான அரசியல் அல்ல. இப்படிப் பிழைப்பதற்குபேசாமல் தூக்குப் போட்டுச் சாகலாம்.
இந்த தொகுதியில் திமுகவோ, அதிமுகவோ யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு கூடுதலாக ஒரு எம்எல்ஏகிடைப்பார். ஆனால் தேமுதிக வெற்றி பெற்றால் இந்திய அரசியலில் எங்களது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மக்களுக்கு எனது வேண்டுகோள், காசு வாங்கிக் கொண்டு யாருக்கும் ஓட்டுப் போடாதீர்கள். அப்படியே போடநினைத்தாலும் காசை அங்கே வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் எங்களுக்குப் போட்டு விடுங்கள். நோட்டுஉங்களுக்கு, ஓட்டு எங்களுக்கு என்றார் விஜயகாந்த்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications