அதிமுகவுக்கு தான் சிக்குன் குனியா: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் இல்லை என முதல்வர் கருணாநிதி கூறினார்.

மதுரையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

கேள்வி: வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனரே?

பதில்: இடைத் தேர்தல் நடக்கும் மதுரை மத்தியத் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுகவினர்நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து லட்சக்கணக்கான பணம்கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில்வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சில முக்கிய பிரமுகர்கள் இன்று காலை தப்பியோடிவிட்டனர். அவர்களைபோலீசார் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கேள்வி: திமுக, அதிமுக இரு கட்சிகளுமே பணம் கொடுப்பதாக விஜய்காந்த் கூறியுள்ளாரே?

பதில்: அவரைப் பற்றி நான் பேசுவதாக இல்லை.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக அறிவித்த இலவச திட்டங்கள் கிடைக்காது என ஜெயலலிதாகூறியுள்ளாரே?

பதில்: தேர்தலுக்குப் பின் அவர்களும் இருக்கப் போகிறார்கள். நாங்களும் இருப்போம். நீங்களும் இருப்பீர்கள்.யார் பொய்யர் என்பது அப்போது தெரியும்.

கேள்வி: திமுக அரசை மைனாரிட்டி அரசு என ஜெயலலிதா கூறி வருகிறாரே?

பதில்: பினாமி எதிர்க் கட்சி என்பதால் அவ்வாறு கூறுகிறார்.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?பதில்: பெருவாரியான இடங்களில் வெல்வோம்.

கேள்வி: மதுரை மத்திய தொகுதியில்?

பதில்: அதையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்
கேள்வி: அதிமுகவினர் தொடர்ந்து திமுகவினர் சேர்ந்து வருகிறார்களே. இதனால் திமுகவுக்கு பலம் கூடுமா?

பதில்: உப நதிகள் வந்து சேரும்போது நதி மகாநிதியாகத் தான் மாறும்.

கேள்வி: பிரச்சாரத்தில் சிக்குன் குனியா நோயை அதிமுக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தி வருகிறதே?

பதில்: அதிமுகவுக்குத் தான் சிக்குன் குனியா வந்துவிட்டது.

கேள்வி: கேரளத்தில் சிக்குன் குனியா இருப்பதாக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறதே. அது போல இங்கும் நோய்உள்ளதா?

பதில்: பெரியாறு அணை எங்களுக்குத் தான் சொந்தம் என்று கேரளா கூறி வருகிறது. அதை நாம் ஒப்புக்கொள்வோமா?. அதுபோலத் தான் இதுவும். தமிழ்நாட்டில் சிக்குன் குனியா இல்லை.

கேள்வி: மதுரை மத்திய தொகுதியில் இருந்து அமைச்சர்களை வெளியேற்ற வேண்டும் என தேர்தல்ஆணையத்துக்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளதே?

பதில்: இதற்கு தேர்தல் கமிஷன் தான் பதில் சொல்ல வேண்டும்.

கேள்வி: தென் மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தி வரும் அழகிரிக்கு கட்சியில் பதவி தரப்படுமா?

பதில்: அவர் கேட்கும்போது பார்த்துக் கொள்ளலாம். அவர் கேட்கவும் இல்லை, நான் கொடுக்கவும் இல்லைஎன்றார் கருணாநிதி.

கேள்வி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?

பதில்: இது பற்றி தேர்தலுக்குப்பின் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துவிவாதிக்கப்படும்.

கேள்வி: தமிழ் சமுதாயத்திற்கு நீங்கள் செய்ய முடியாத பணி எதுவும் இருக்கிறதா?

பதில்: சில தமிழர்களை தான் திருத்த முடியாமல் இருக்கிறது

கேள்வி: மாநகராட்சி, நகராட்சி தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்காமல் ஏன் உறுப்பினர்களை கொண்டு தேர்ந்தெடுக்கும்முறை கொண்டு வரப்பட்டது?

பதில்: உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஒரு கட்சியினராகவும் தலைவர் வேறு கட்சிக்காரருமாக இருந்தால் வளர்ச்சிபணிகள் சரிவர நடக்க முடியாது. எனவேதான் உறுப்பினர்களை கொண்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் முறைகொண்டுவரப்பட்டது என்றார் கருணாநிதி.

மதுரையில் விரைவில் டைடல் பார்க்:

முன்னதாக மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கெளஸ் பாட்ஷா மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி தலைமையில் மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன்,மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், மதுரை மாநகராட்சியை உருவாக்கியது திமுக அரசுதான். திமுக ஆட்சியில்தான் மதுரை நகரில் ஏராளமான வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக அரசைப் பொறுத்தவரை ஒரு குழந்தையை பேணி பாதுகாப்பது போல மதுரை நகருக்குத் தேவையானஅனைத்தையும் செய்து தர ஆர்வமாக உள்ளது.

கடந்த கால திமுக ஆட்சிக்காலங்களில்தான் மதுரையில் ஏராளமான பாலங்கள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,சுற்றுச்சாலை ஆகியவை அமைக்கப்பட்டன. வைகை ஆற்றின் கரைகளும் திமுக ஆட்சியில்தான் பலப்படுத்தப்பட்டன.

யாதவர் கல்லூரி, செளராஷ்டிர கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து அதன் வளர்ச்சிக்கு திமுக அரசு உதவியது. இன்னும் நகரின் வளர்ச்சிக்கான திட்டங்களைநிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. அதற்காக பல்வேறு திட்டங்களும் உள்ளன.

மதுரையில் பெரிய தொழிற்சாலை இல்லை என தா.பாண்டியன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார். மதுரை நகருக்கு திமுக அரசு எந்தந்த திட்டங்களைநடைமுறைப்படுத்தியிருக்கிறது என்பதை கவனித்திருந்தால் இந்த கோரிக்கைவைத்திருக்க கூடாது.

சென்னையில் உள்ளது போல அடுத்தடுத்த டைட்டல் பார்க்குகள் மதுரை, கோவைதிருச்சியிலும் அமையவுள்ளன. விரைவில் இவைகளுக்கான கால்கோள் விழாநடத்தப்படும். விரைவில் இதற்கான கால்கோள் விழா விரைவில் நடைபெறும். இதன் மூலம் மதுரை மற்றும்சுற்றுப்புறத்தில் தொழில் வளம் பெருகி ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எங்கள் கூட்டணியின் வலிமையை புரிந்து கொண்டதால் மக்கள் மக்களவைத்தேர்தலில் 40 இடங்களிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்தனர். இந்தகூட்டணியில் குழப்பம் வராதா, கூட்டணி உடையாதா என விரும்புகின்றனர்.திருமாவளவன் கூறியபடி இந்த கூட்டணி மேலும் மேலும் வலுப்பெறும். வலுவைஇழக்காது.

சட்டசபை தேர்தலில் கூட்டணியினர் ஆதரவுடன் ஆட்சி அமைத்து வாக்குறுதிகளைநிறைவேற்றி வருகிறோம். ஆனால் சிலர் மைனாரிட்டி அரசு என கூறுகின்றனர்.அதிலும் எனக்கு மகிழ்ச்சி தான். இது மைனாரிட்டியினருக்காகவே நடக்கிற ஆட்சி.

இந்த கூட்டணியில் ஏதாவது ஒரு குறை சொல்லி கருணாநிதிக்கும், கிருஷ்ணசாமி,ராமதாசிற்கும் மோதல் என செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தமுடியாதா என செயல்படுவது சர்வாதிகாரத்திற்கு தங்களை அறியாமல் துணைபோகிறார்கள் என அர்த்தம்.

வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருந்து இப்போது நடப்பது நல்லாட்சி நடப்பதாககருதுவீர்களானால் இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

முன்னதாக பாளையங்கோட்டையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில்,

கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் கையெழுத்து போட்டும் முதல்வர் கையெழுத்து இல்லாமல் பல கோப்புகள்எங்கும் நகராமல் இருந்தன. தமிழக மக்களின் தண்ணீர் தேவையை நிறைவு செய்து. மின்சார தேவைக்காக கேரளஅரசோடு ஒப்பந்தம் போட வேண்டிய கோப்புகள் கூட ஜெயலலிதாவின் பார்வைக்காக காத்துக் கிடந்தது. இப்படிஒரு ஆட்சி கடந்த 5 ஆண்டுகள் நடந்தது.

2001 தேர்தலின் போது அதிமுகவினர் பல வாக்குறுதிகளை வழங்கினர். தேர்தலுக்கு மட்டுமல்லாமல் கவர்னர்உரையிலும் அந்த வாக்குறுதியை கூறியிருக்கிறார். ஆனால் கடந்த ஆட்சியில் எந்த வாக்குறுதிகளும்நிறைவேற்றப்படவில்லை.

முதல்வராக பதவியேற்ற உடன், அந்த விழா மேடையிலேயே கோப்புகளை கொண்டு வா என்று கூறி அளித்தவாக்குறுதிக்கு இணங்க ரூ. 2க்கு ஒரு கிலோ அரசி திட்டமும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரம் 2முட்டை வழங்கவும் ஆணை பிறப்பித்தவர்கள் நாங்கள்.

செப்டம்பர் 17ம் தேதி 26,000 ஏக்கர் தரிசு நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு வழங்கினோம். விவசாயிகளின் ரூ.7,000 கோடி கூட்டுறவு கடனை ரத்து செய்தோம். இத்தனையும் செய்தும் கலர் டிவி எங்கே என்றனர். கலர்டிவியும் கொடுத்தோம். பின்னர் ஒவ்வொரு வீட்டிக்கும் கேபிள் எங்கே என்றனர். அதுவும் முடிந்தால் தரப்படும்என்றோம்.

இப்படி ஒவ்வொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் மனதோடு செய்து கொண்டு வருகிறேன். இன்னும் தமிழகமக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது.

இந்த கூட்டணியில் ஏதாவது ஒரு குறை சொல்லி கருணாநிதிக்கும், கிருஷ்ணசாமி,ராமதாசிற்கும் மோதல் என செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தமுடியாதா என செயல்படுவது சர்வாதிகாரத்திற்கு தங்களை அறியாமல் துணைபோகிறார்கள் என அர்த்தம். வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருந்து இப்போதுநடப்பது நல்லாட்சி நடப்பதாக கருதுவீர்களானால் இடைத்தேர்தலில் ஆதரவளிக்கவேண்டும். இவ்வாறு பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+