தீவிரவாதிகளுக்கு உதவினோம்: பாக். ஒப்புதல்
வாஷிங்டன்:
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியது என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மகமூத் அலிதுரானி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசுகையில் இந்த பரபரப்புத்தகவலை துரானி வெளியிட்டார். துரானி பேசுகையில், காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைதீவிரவாதிகள், ஜிகாதிகள் என்று எப்படி வேண்டுமானாலும் நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள். அவர்களின்போராட்டத்திற்கு நாங்கள் ஒரு கட்டத்தில் உதவியுள்ளோம்.ஆனால் இப்போது பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி யாரும் ஊடுறுவாமல் பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.லஷ்கர் இ தொய்பா அமைப்பு இப்போது பாகிஸ்தானில் செயல்படவில்லை. அந்த அமைப்பினர் யாரும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுறுவாமல் பாகிஸ்தான் கவனமாக உள்ளது.
லஷ்கர் அமைப்பு ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு. பாகிஸ்தானில் அவர்கள் எங்குமே கிடையாது. இருப்பினும்லஷ்கர் அமைப்பினர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ராவல்பிண்டி மார்க்கெட்டில் தங்களது செயல்பாடுகளுக்காகபணம் வசூலித்தனர். ஒன்றிரண்டு பெட்டிகளை இவர்கள் வைக்கவில்லை, ஆயிரக்கணக்கான பணம் வசூலிக்கும்பெட்டிகளை வைத்திருந்தனர்.
ஆனால் அது இப்போது இல்லை, அந்தக் கதை முடிந்து விட்டது. அந்த அமைப்புக்கு இப்போது தடைவிதிக்கப்பட்டு விட்டது. எங்களால் முடிந்த அளவுக்கு தீவிரவாதிகளை தடுக்க முயற்சித்து வருகிறோம்.
தீவிரவாதிகள் எல்லை தாண்டுவதை தடுக்கும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லை, இந்தியாவுக்கும் அதில்கூட்டுப் பொறுப்பு உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மதரசாக்கள் அனைத்தும் தீவிரவாதத்தை பரப்புவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.இஸ்லாம் குறித்த குறுகிய பார்வையின் பிரதிபலிப்புதான் இந்த குற்றச்சாட்டு.
மதரசாக்களில் வெறுமனே இஸ்லாம் குறித்த போதனை மட்டும் அல்லாது அவற்றையும் தாண்டியபோதனைகளை ஊக்கப்படுத்த பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு கணிதம், ஆங்கிலம் போன்றவையும்இனி கற்பிக்கப்படும். மதரசாக்களின் செயல்பாடுகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுத நிலைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. மீண்டும் பாகிஸ்தானில் ராணுவப்புரட்சி நடக்குமா என்று கேட்டால் அது சரியான கேள்வி இல்லை என்பதே எனது பதில் என்றார் துரானி.
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்துள்ளது என்று அந்நாட்டு தூதர் கூறியிருப்பது, அதுவும்அமெரிக்காவில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications