திமுகவில் ராஜன் செல்லப்பா அண்ணன்!
மதுரை:
மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவின் அண்ணன் ராஜாராம் பாண்டியன், நேற்றுமுதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
வெள்ளிக்கிழமை இரவு மதுரை வடக்குமாசி வீதி-மேலமாசி வீதி சந்திப்பில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும்திரளாக கலந்து கொண்டனர்.இந்த பொதுக் கூட்டத்தின் போது ராஜாராம் பாண்டியன் முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவருக்குபொன்னாடை போர்த்தி திமுகவில் இணைந்தார். ராஜாராம் பாண்டியன் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தவர்.1968ம் ஆண்டு முதல் திமுக மாணவர் அணி உறுப்பினராக இருந்தார். பின்னர் பசுமலை திமுக கிளைச்செயலாளராக இருந்தார்.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தபோது 1972ம் ஆண்டு ராஜாரம் பாண்டியனும்அதிமுகவில் இணைந்தார். சோழவந்தான் அதிமுக கிளைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளைவகித்துள்ளார். பின்னர் 1996ல் அதிமுகவிலிருந்து விலகினார். மறுபடியும் 98ல் அதிமுகவில் இணைந்தார்.
தனது தம்பியும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளராகவும், மதுரை மத்திய தொகுதி அதிமுக வேட்பாளராகவும்நிறுத்தப்பட்டுள்ள ராஜன் செல்லப்பாவுக்கு நெருக்கடி தரும் வகையில் ராஜாராம் பாண்டியன் திமுகவில்இணைந்துள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
அதிமுகவில் தொடர்ந்து எம்.ஜி.ஆர். விசுவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இதனால் தான் மனம் நொந்துதிமுகவில் சேர்ந்ததாக ராஜாராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications