சிறார் தொழிலாளர் தடை சட்டம் அமல்
டெல்லி:
நாடு ழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதற்குதடை விதிக்கும் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வீட்டு வேலைகள், உணவகங்கள், சாலையோர உணவகங்கள், கட்டுமானத் தொழில்,ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தேனீர்க் கடைகள் மற்றும் பிற இடங்களில் 14வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்யமத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.இந்த சட்டம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவது குற்றச் செயலாகும்.இதுபோல 14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதுசட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனைஅல்லது ரூ.20,000 அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனைகிடைக்கும்.
மத்திய அரசின் இந்தச் சட்டத்தை மேற்கோள் காட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரை வேலைக்கு அமர்த்துவதுசட்டப்படி குற்றம். அதுபோல செயல்படுபவர்கள் மீது 1986ம் ஆண்டு குழந்தைத்தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் கீழ் முறையான சட்டநடவடிக்கை தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications