கேண்டீன் வழக்கு: கையெழுத்துப் போட்ட காளிமுத்து
சென்னை:
எம்.எல்.வி. விடுதி வளாக கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்குதொடர்பாக இன்று சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துநேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
சென்னை அரசினர் தோட்டம், எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள 2 கேண்டீன்களுக்கு அனுமதி வழங்கியதில்அரசுக்கு பல லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி காளிமுத்து மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் 2வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மனு தாக்கல் செய்தார் காளிமுத்து.மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் எனஅறிவுறுத்தியது.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார் காளிமுத்து.இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் டி.எஸ்.பி.பொன்னுச்சாமி முன்னிலையில் ஆஜரான காளிமுத்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இன்று முதல் 7 நாட்களுக்கு தினசரி நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது அவருக்குவழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனின் நிபந்தனையாகும்.












Click it and Unblock the Notifications