வாக்காளர்களுக்கு மூக்குத்தி: 3 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்திகளை விநியோகித்ததாக அதிமுக வேட்பாளரின்உறவினர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூர் அருகே உள்ளது காரப்பாக்கம். இந்தக் கிராம பஞ்சாயத்துத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜனார்தனன் என்பவரும், திமுக சார்பில் கணபதிஎன்பவரும் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் ஜனார்த்தனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அதிமுகவினர்வாக்காளர்களுக்கு இலவச தங்க மூக்குத்திகளை விநியோகிப்பதாக திமுகவினர்போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து 3 பேரைப் பிடித்தனர். அவர்களிடமிருந்துஏராளமான தங்க மூக்குத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றைவாக்காளர்களுக்கு விநியோகிக்க அவர்கள் கொண்டு வந்திருந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் அதிமுக வேட்பாளரின் உறவினர்கள் என்பதுவிசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications