மே.வங்கம் கொண்டு செல்லப்பட்டார் கஜூரோல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேபாள மாவோயிஸ்ட் தலைவர் சந்திர பிரகாஷ் கஜூரோல் இன்று பலத்தபாதுகாப்புடன் மேற்கு வங்க மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் தப்பிச் செல்ல முயன்றதாக சென்னை விமானநிலையத்தில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட கஜூரோல்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனை முடிந்ததும் கடந்தஆகஸ்ட் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த உடனேயே மேற்கு வங்க போலீஸார்,தங்களது மாநிலத்தில் கஜூரோல் சம்பந்தப்பட்ட வழக்கில் அவரைக் கைது செய்தனர்.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தன்னை மேற்கு வங்கம் கொண்டு செல்ல அனுமதி தரக் கூடாது என்று கோரிகஜூரோலும் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னைஉயர்நீதிமன்றம் கஜூரோலின் கோரிக்கையை நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில்,கஜூரோலை மேற்கு வங்கம் அழைத்துச் செல்ல ஏற்கனவே அனுமதி வாங்கிவைத்திருந்த மேற்கு வங்க போலீஸார், இன்று கஜூரோலை பலத்த பாதுகாப்புடன்மேற்கு வங்க மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கொல்கத்தா வழியாக அவர் ஜல்பைகுரி என்ற இடத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளார். இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கஜூரோல்கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். கஜூரோலுக்கு பாதுகாப்பாக உயர்நீதிமன்றஉத்தரவின் பேரில், தமிழக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட கியு பிரிவு டி.எஸ்.பி.மகேஸ்வரனும் சென்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+