சிக்குன்குனியா: அமெரிக்க டாக்டர் மதுரையில் பலி
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கோபால் கிஷன் ரஸ்தோகி, மதுரைக்குவந்தபோது சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
சண்டிகரைச் சேர்ந்தவர் டாக்டர் கோபால் கிஷன் ரஸ்தோகி. 70 வயதாகும் இவர் சண்டிகரில் உள்ள முதுகலைமருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரத்தம் தொடர்பான ஆய்வுத் துறையின் தலைவராக இருந்தவர்.கடந்த 1978ம் ஆண்டே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டார். அங்கு பணியாற்றி வந்த ரஸ்தோகிஅவ்வப்போது இந்தியாவுக்கு வந்து செல்வார்.
சமீபத்தில் கொடைக்கானலில் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக ரஸ்தோகி வந்திருந்தார்.மதுரையில் தங்கியிருந்தபோது அவருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் உடல் நலம்பாதிக்கப்பட்ட ரஸ்தோகி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
ரஸ்தோகியின் மறைவுக்கு சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் இரங்கல்தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொண்டு 2 நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தினர்.












Click it and Unblock the Notifications