உள்ளாட்சி: முதல் கட்ட பிரசாரம் ஓய்ந்தது
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தேர்தல்நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.முதல் கட்டத் தேர்தலில், 4 மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நலை நகராட்சிகள், 281பேரூராட்சிகள், 195 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் தமிழக போலீஸார் தவிர கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில போலீஸாரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த மாநில போலீஸார் தற்போது தமிழகம் வரத்தொடங்கியுள்ளனர்.
மொத்தம் 25 கம்பெனி பிற மாநில போலீஸார் தமிழகத்திற்கு வரவுள்ளனர். முதல் கட்டமாக இன்று காலைஆந்திராவிலிருந்து 8 கம்பெனி போலீஸார் சென்னை வந்தனர். மிகவும் பதட்டமான பகுதிகளில் இவர்கள்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். 17ம் தேதி வரை இவர்கள் தமிழகத்தில் இருப்பார்கள்.
இவர்கள் தவிர தமிழக காவல்துறையைச் சேர்ந்த 1 லட்சம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications